|      முன்னோர் ஊழியில் பிரமன் முன் படைத்த உலகம் முழுதும் நம்மால்     ஒடுக்கப் பெற்றது. பொன்னொக்கும் தேமலையும், பொன்னணிகளையும்
 தாங்கிய கொங்கைகளையும் நாகணவாய்ப் பறவையின் சொல்லொக்கும்
 இனிய மொழியினையுமுடையாய்! அக் காலத்தில் தருமதேவதை யாவும்
 அழிந்தமையை ஊன்றி நோக்கி,
 		| நில்லாஉல கத்துளவாய சரிப்ப நிற்ப எல்லாம்அழி வுற்றன யானும் இறப்ப லேர்என்
 றல்லாந்தினிச் செய்வகை யாதென் றிறைஞ்சி நம்பாற்
 கொல்லேறுரு வங்கொடு வந்தது போற்றி யென்ன.    75
 |       நில்லாமையை இயல்பாகவுடைய இயங்கியற் பொருள்களும்     நிலையியற் பொருள்களும் ஆகிய யாவும் அழிந்தன. தருமதேவதை யானும்
 அழிவேனோ!  என்று மனம் கொட்புற்று இப்பொழுது செயத்தக்கது யாது?
 என்று வணங்கி நம்மிடத்து விடை வடிவத்துடன் எதிரே வந்து போற்றி நிற்ப,
 		| கண்டாம் அதனைக் கவலாதிஎன் றூர்தி யாக்கிக் கொண்டாம் கொளப்பெற் றுலவாக்களி கூர்ந்ததாக
 வண்டார் அளகக் கொடிஅவ்விருள் மாண்ட காலைத்
 தண்டா அருளால் அதற்கின்னது சாற்ற லுற்றேம்.    76
 |       ‘அதனைக்கண்டு வருந்தாதே என அருள் செய்து விடையாகக்    கொண்டனம், கொண்டமையால் கெடாத மகிழ்ச்சி மீக்கூர்ந்ததாக, மீள உலகச்
 சிருட்டி நிகழும் காலை, தாரணிந்த கூந்தலையுடைய, கொடியே!  நீங்காத
 திருவருளால் அவ்விடைக்கு இதனைக் கூறலுற்றோம்.’
 		| தரிப்பித்தலின் நீதரு மம்தரிப் பித்தி டாமை தெரிப்பிக்கும் அதன்ம மெனப்பெயர் செப்பு மால்எம்
 பொருட்டுப்புரி பாவமும் புண்ணிய மாக்கி எம்பால்
 விருப்பற்றவர் செய்அற மும்மற மாக்கு விப்பாய்.   	77
 |       ‘நீ தரிப்பித்தலினால் (தாங்குவித்தலால்) தருமம் ஆவாய்.     தரிப்பிக்காமையை உணர்த்தும் அதன்மம் எனும் பெயர், எம்மை நோக்கிச்
 செய்யப்படும் பாவத்தையும் புண்ணியம் ஆக்குவித்து எம்மை நினையாதார்
 செய்யும் அறங்களையும் பாவமாக்குவிப்பாய்.’
 		| இவ்வேற்றிட பப்படி வத்துடன் எங்கும் எம்முன் செவ்வேவதி கென்றருள் செய்திடும் நல்வ ரம்பெற்
 றவ்வாறு நமக்கெதிர் நித்தலும் கைகும் அங்கேழ்ச்
 செவ்வாய்க்கரு மென்குழல் வெண்ணகைச் செம்பொற்பூணாய்
 |       இந்த இடப வடிவத்துடன் எம் சந்நிதியில் எவ்விடத்தும் செம்மைபெற    இருப்பாய் என்றருள் செய்ய அந் நல் வரத்தைக்
 |