தழுவக் குழைந்த படலம் 613


கொண்டு, அழகிய நிறமமைந்த செவ்வாயும், கரிய குழலும், வெள்ளிய
முறுவலும், செம்பொன்னால் அமைந்த அணிகளும் உடையாய்! அங்ஙனமே
நமக்கு முன்னர் என்றும் விளங்கும்.

வீறார் தருமக் கடவுட்சின வெள்வி டைக்கோர்
கூறாதலின் மாயனும் முப்புரங் கொன்ற அஞ்ஞான்
றேறாய்எமைத் தேரொடு தாங்கினன் ஏறு வந்த
வாறாம்இது மேல்அது செய்பிழை மற்றுஞ் சொல்வாம்.   79

     சிறப்பமைந்த தருமக் கடவுளாகிய வெள் விடைக்குத் திருமாலும் ஓர்
அமிசமாகலின் (உலகைத் தாங்குதலின்) முப்புரத்தை அழித்த நாளில்
அத்திருமால் விடையாகித் தேரோடும் தாங்கினர். ஏற்றுருவம் வந்த முறை
இதுவே ஆகும். இனி அத் தரும விடை செய்த பிழையையும் அதன்
தீர்வையும் கூறுவோம்.! 

கருடன் செருக்கடைத்ல்

கலி விருத்தம்

பின்னொரு காலத்துப் பிறங்கும் ஆற்றல்சால்
பன்னகப் பகைமைகொள் பறவை நாயகம்
பொன்அமர் மார்பனைப் பொறுத்து வல்லையே
அந்நிலை உலகெலாம் அணுகி மீண்டதால்.        80

     பின்னோர் காலத்தில் விளங்கும் ஆற்றலமைந்த பாம்புகளோடும் பகை
பூண்ட பறவை அரசாகிய கருடன் திருமகள் உறைகின்ற மார்பினராகிய
திருமாலைச் சுமந்து உலகமுற்றும் விரைந்து சென்று அந்நிலையே மீண்டது.

மீண்டபின் தருக்குமீக் கொண்டு வீறுடன்
ஆண்டகை மாயனை நோக்கி அண்ணலே
காண்டகும் ஆற்றலிற் கதழ்வின் என்நிகர்
மாண்டவர் உளர்கொலோ வையம் மூன்றிலும்      81

     மீண்டமையால் செருக்கு மீக்கூர்ந்து இறுமாப்புடனே புருடோத்
தமனாகிய திருமாலை நோக்கி ‘‘அண்ணலே! புலப்படும் வலிமையினும்
விரைதலினும் எனக்கு நிகரான மாட்சிமையுடையவர் மூவுலகிற் றேடினும்
ஒருவரேனும் உளர் ஆவரோ?”

நிற்பன சரிப்பன யாவு மாய்நிறை
நிற்பொறுத் தரைக்கணப் பொழுதின் நீடியோய்
பொற்பமூ வுலகினும் போந்து மீளும்இவ்
அற்புதம் எனக்கலா தார்க்குண் டாகுமோ.         82

     ‘‘நெடியோனே!  (திரிவிக்கிரமனே) நிலையிற் பொருள்களும்,
இயங்கியற் பொருள்களுமாகிய யாவுமாய் நிறைந்த நின்னைச்