சுமத்தலும், அரைக் கணத்தில் பொலிவுடைய மூவுலகங்களுக்கும் சென்று மீளுதலும் ஆகிய இவ்வற்புதச் செய்கை எனக்கு அல்லாமல் வேறு யார்க்கு உள்ளன வாகும்,’’ என்றிது புள்ளர சியம்பக் கேட்டலும் நன்றெனக் குறுநிலா நகைமு கிழ்த்தரோ இன்றிதன் செருக்கெலாம் இடப நாயகம் ஒன்றறக் களையுமென் றுளத்தி லெண்ணினான். 83 | என் றிதனைப் பெரிய திருவடி கூறக்கேட்டபொழுது அதன் பேதைமை பொருளாக நகைத்து இன்றே இதன் இறுமாப்பினை முற்றவும் இடபதேவர் சிறிதும் விடாது களையும் என்றுட்கொண்டனர். மெய்யுரை விளம்பினை உலக மீமிசை ஐயநிற் கிணைஎவர் ஆரும் இல்லெனக் குய்யம்வைத் தணிமுடி துளக்கிக் கூறினான் செய்யவள் வனமுலை திளைக்கும் மார்பனே. 84 | இலக்குமியின் அழகிய கொங்கைதோய் மார்பினராகிய திருமால், ‘ஐயனே! மெய்யுரையே விரித்தனை. உலகில் நினக்கொப்பவர் ஒருவரும் இலர்’ என உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று கூறி அழகிய திருமுடியை அசைத்துக் கூறினர். வார்சடைப் பிரான்அடி வணங்கு வாம்எனாப் போர்வலிப் புள்ளொடும் கயிலை புக்கனன் ஏர்கெழு போகமா புரத்தின் எல்லைஅவ் வூர்தியின் இழிந்துசென் றுங்கண் எய்தினான். 85 | நீண்ட சடைமுடிப்பிரானாரை வணங்குவோம் என்று போர் வலிமையையுடைய கருடனொடும் கயிலையை அடைந்து அழகிய போகபுரத்தின் எல்லையில் அவ்வூர்தியினின்றும் இறங்கிச் சென்றவ்விடத்தை எய்தினர். ஐந்ததாம் ஆவர ணத்தின் எம்மெதிர் ஐந்துகோ மாதர்சூழ்ந் தணுகி வைகவாழ் மைந்துடை விடைஅவண் மாய னோடுறும் வெந்திறற் புட்குல வேந்தைக் கண்டதால். 86 | ஐந்தா மதிலிடமாகிய இங்கு நம் முன்னர் ஐந்து பசுக்கள் சூழ்ந் துடனிருக்க வாழும் வலிமையுடைய இடப ஏறு அங்குத் திருமாலைச் சுமந்து வந்த பேராற்றலையுடைய புள்ளரசாகிய கருடனைக் கண்டது. கோமாதர்: நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்பன கருடன் துன்பம் தன்னெதிர் இகழ்ச்சியால் தருக்கும் ஆங்கதன் புன்னிலை நோக்குபு பொருக்கெ னச்சிரம் | |