உடலொடுங்கி மனமுடைந்து தொடர்ந்து அயர்ந்த நெட்டுயிர்ப் பெறிந்து வருந்தி உடல் கம்பிக்கவும், கண்ணீர் நீள ஒழுகவும், முரிந்த சிறகுகள் இரு பக்கத்தும் தொங்கவும், நீண்ட கைகளைச் சிரமேற் குவித்துத் திருமாலின் அயலே போய் நிற்ப யாம் நோக்கி, கொடிய கொலைசூழும் அம்பினை ஒக்கும் கண்களையுடைய உமையே! விடைக்கு இதனைக் கூறினோம். எம்முடை ஆணை இன்றி எம்மெதிர் நீயே இந்நாள் மம்மரின் இதனைச் செய்தாய் மானிட வடிவம் தாங்கிச் சும்மைநீர் வரைப்பிற் காஞ்சித் தொன்னகர் எய்தி அங்கண் நம்மைநீ புரிதி பூசை நவைஇது கழியு மாறே. 104 | உன் விருப்பப்படி திருமுன்பே இந்நாள் மயங்கிய அறிவால் நீயே இக் குற்றத்தைப் புரிந்தனை. ஆகலின், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நிலவுலகில் மானிட வடிவொடு காஞ்சி என்னும் பழம்பதியை அடைந்து அவ்விடத்தே நம்மை நீ பூசனை புரிதி. இக் குற்றம் தவிருமாறு இதுவேயாகும். விடை காஞ்சியில் விமலனை வழிபடல் எனவிடை யளிப்பப் போற்றிப் புடைபரந் தெழுந்து வஞ்சி யனவிடை துவள வீங்கும் அலர்முலைக் கொம்ப ரன்னாய் சினவிடை யரசு வல்லே நரவுருத்திகழக் கொண்டு மனவிடை இழைத்த செம்பொன் மாளிகைக் காஞ்சி நண்ணி. 105 | வஞ்சிக் கொடியை ஒக்கும் சிறிய இடை துவளும்படி பக்கங்களிற் பரவி எழுந்து திரண்டு பருத்த கொங்கையையுடைய பூங்கொம்பு போல்வாய்! விடைக் கிவ்வாறு கூறி விடை கொடுப்பப் போற்றி செய்து சினமுடைய ஏறு நரவடிவு விளங்க விரையத்தாங்கி மாணிக்கங்கள் கொண்ட குயிற்றப்பட்ட செம்பொன்னாலாகிய மாடங்களையுடைய காஞ்சியை நண்ணி, கவிழிணர்த் தனிமா மூலத் தெம்மெதிர் கமலப் பூந்தோ டவிழ்சிவ கங்கைக் கோட்டின் ஆங்கது வைகும் வைப்பிற் குவிவரும் பெருமை சான்ற குடதிசை முகமாத் தன்பேர்ப் புவிபுகழ் இலிங்கம் தாபித் தருச்சனை புரிந்து போற்றி. 106 | கவிழ்ந்த பூங்கொத்துக்களையுடைய ஒற்றை மாமரத்தின் கீழெழுந்தருளியுள்ள எம்முடைய திருமுன்பில் ஏடவிழ் தாமரை மலர்களையுடைய சிவகங்கையின் கரையிடத்தே இடபம் இருத்தற்குரிய இடத்தே இருந்த பெருமை அமைந்த மேற்கு முகமாக இடபேச்சரம் என்று தன் பெயரால் உலகம் புகழும் சிவலிங்கம் நிறுவி அருச்சனை புரிந்து துதி செய்து, காட்சிஈத் தருளும் நம்பால் வரம்பல கருதிப் பெற்று மாட்சியின் உலகம் எல்லாம் மனுமுறை வழாது பன்னாள் | |