மணம் புரிவித்தலும், விளக்களித்தலும், தீராக் கடனைத் தீர்த்துப கரித்தலும், சிவனடியவர்க்கு வேண்டுவ கொடுத்தலும், உருத்திராக்கம் ஈதலும், திருநீறு கொடுத்தலும், ஒப்பில்லாத சிவபெருமான் பூசனைக் குரிய கொடுத்தலும், பாசத்தைப் போக்கும் வேத உண்மையை விளக்கும் சிவாகமங்கள், சிவபுராணங்கள் இவற்றை ஓதுவித்தலும், சிவபிரான் அடிக்கீழ்ப் பத்தி செவியறி வுறுத்த லோடும் உவகையின் அபயம் யார்க்கும் வழங்குதல் உள்ளிட் டோதும் நவையிரி அறம்எண் ணான்கும் நாள்தொறும் நிகழ்ச்சி மாணப் பவநெறி துரக்கும் ஞானப் பைந்தொடி நிறுவிப் பின்னர். 141 | சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்பு தோற்றச் சிவோபதேசஞ் செய்தலும், விருப்பொடும் அபயமளித்தலும் எனப்பெறும் இவையும் ஆகக் குற்றத்தைக் கெடுக்கும் முப்பத்திரண்டறங்களும் நாடொறும் நடாத்திப் பிறவியை அறுக்கும் பிராட்டியார் மாட்சிமைப்பட நிறுவிப் பின்னர், அம்மையார் திருவேகம்பத்திற் கெழுந்தருளல் வீங்குநீர்க் கம்பை யாற்றின் கரைமிசை விரிமா நீழல் ஓங்கொளிப் பொருளைக் காணும் உறுபெறுங் காதல் ஈர்ப்ப வாங்குநுண் மருங்குல் நோவ வளரிளங் குவவுக் கொங்கைப் பாங்கியர் முதலோர் சூழப் படரொளி மறுகிற் போந்தாள். 142 | நீர்ப் பெருக்கினையுடைய கம்பாநதிக் கரைமிசை வேத மாமரத்தின் நீழலில் பேரொளிப் பொருளைக் காணுதற்குரிய மிகப்பெரிய பேரன்பு தம்மைப்பற்றி இழுத்தலால், துவளுகின்ற நுண்ணிய இடை வருந்துமாறு வளர்கின்ற இளையவும் திரட்சி உடையவும் ஆகிய தனங்களையுடைய தாதியர் முதலானோர் உடன்வர ஒளி பரவும் திருவீதியிற் போந்தனர். எழுசீரடி யாசிரிய விருத்தம் மலையான் மடமகள் மறுகூ டணைதலும் வளமா நகரவர் தொழுதாடி, உலவா நசையொடு பணிவார் மனமகி ழுறுவார் வயின்வயின் அணிசெய்வார், குலைநீள் கதலிகள் கமுகந் துகில்விரி கொடிவே றினையன நடுவார்கள், மலர்மா லிகைநவ மணிமா லிகைஎழில் மலிதோ ரணநிரை நிறைவிப்பார். 143 கௌரி அம்மையார் திருவீதியில் எழுந்தருளுதலும் வளம் பொருந்திய காஞ்சியம்பதியில் வாழ்வோர் தொழுது ஆடுவோர் ; கெடாத விருப்பொடும் வணங்குவார்; மனமகிழ்ச்சி மிகுவார்; எவ்விடத்தும் கோடிப்பார்; நீண்ட குலைகளைக் கொண்ட வாழை மரங்களையும், பாக்கு மரங்களையும், வெண்கொடிகளையும் இவை போல்வனவாகிய மங்கலப் பொருள்களையும் நிறுவுவர்; மலர் மாலைகளையும், நவரத்தின மாலைகளையும் அழகுமிக்க தோரணப் பத்திகளையும் ஆங்காங்கு நிறையத் தூக்குவர். |