|      விரித்து விளக்கப்பெறும் உண்மைப் பரப்பிரமமாகிய சதாசிவ மூர்த்தி     எழுந்தருளி இருத்தலைச் சிவயோகத்தினால் பார்த்தனர். நறுமணங்கமழும்
 தேனைச் சிந்துகின்ற துளவ மாலையையணிந்த திருமால் தரிசித்த
 மகிழ்ச்சியால் விரைவாக அன்பு மேலெழப் போற்றி போற்றி என்று துதித்து
 வணங்கினார்.
 		| அன்பி னுக்கெளி யார்பெருங் கருணைகூர்ந் தருளி இன்ப ஆனந்தத் திருநடம் ஆயிடை இயற்ற
 வன்ப ழம்பகை மலஇருள் கடிந்தது காணூஉ
 என்பு நெக்குநெக் குருகினான் முரனைஅன் றிறுத்தோன்.   155
 |       முராரியாகிய திருமால் அன்பினுக்கெளிவந்தருளும் பெருமானார்     மிக்க அருளுடையவராய்ப் பேரின்பத்தைத் தோற்றுவிக்கும் ஆனந்தத்
 திருநடனத்தை இருதய தாமரையின் கண்ணே நடித்தருள அனாதியாய்
 வலியபகையாயுள்ள ஆணவமல இருள் சிறிதும் இல்லையாய் ஒழிந்ததைப்
 பார்த்து என்பும் நெகிழ்ந்து நெகிழ்ந்து உள்ளம் உருகினார்
 		| புளகம் எங்கணும் போர்த்துமெய் பனித்துவாய் குழறி இளகி இன்பநீர் விழியுகக் கம்பனம் எய்தித்
 தளர்வில் ஆர்வத்தால் தனைமறந் தறிதுயில் மேவும்
 அளவில் ஆங்கயல் இருந்தவர் அன்னது கண்டார்.  	156
 |       மயிர் சிலிர்த்தும், திருமேனி கம்பித்தும், வாய் குழறியும் நெகிழ்ந்து     ஆனந்த கண்ணீர் சொரிந்தும், உளம் பதைபதைத்தும் மெலிவில்லாத
 விருப்பினால் இந்நிலைகளின் மேலும் தம்மை மறந்து யோக நித்திரையில்
 பொருந்தும் மாத்திரையில் பாற்கடலில் உடனிருந்தவர் அத்தன்மையைக்
 கண்டனர்.
 		| கண்டு நெஞ்சகம் பதைத்தனர் திகைத்தனர் கவலை கொண்ட ழுங்கினர் அஞ்சினர் இரங்கினர் குறிப்பின்
 வண்ட லர்த்திரு முதலியோர் மற்றிது நிகழ
 அண்டர் நாயகற் கடுத்தவா றென்னெனத் தெரிவார்.  	157
 |       வண்டுகள் சூழும் தாமரை மலரில் வைகும் திருமகள் முதலானோர்     கண்டு உள்ளம் நடுங்கினர்; மயங்கினர்; வருத்தம் எய்தினர்; வெருவினர்;
 பரிந்தனர்; குறிப்பொடும் இதுதோன்ற தேவர் தலைவராகிய இவர்க்கு
 நேர்ந்தது யாதோ என ஆராய்வார்.
 		| மென்ற ளிர்ச்செழுங் கோமளத் திருவடி வினையேன் வன்ற னிக்கரம் வருடலான் வருந்தின கொல்லோ
 அன்றி என்மடித் தலமிசை அசைந்துநொந் தனவோ
 என்று தன்உளம் அயிர்த்தனள் இலங்கெழில் மலராள்.  	158
 |       அழகிய மலர்கள், மெல்லிய தளிர்போலும் மிகவும் மெல்லிய     திருவடிகள் பாவியேனுடைய மிகவும் வலிய கைகள் தைவருதலால்
 80	 |