| 		| கச்சி வாணர் சென்னி தாள்கள் காண முன்ப றந்தகழ்ந் தச்ச ழிந்த மால்வி ரிஞ்சர் அன்று சென்ற எல்லைகள்
 நிச்ச யிப்ப அவ்வ ளவும் ஏக வைத்த நீள்குறி
 நொச்சி யுங்கி டங்கு மென்ன நோக்கு வார்க்கி லங்குமே.   41
 |       கச்சியிலெழுந்தருளியுள்ள இறைவருடைய திருமுடியையும்,     திருவடிகளையும் காணும் பொருட்டு, முன்னர் அன்னமாய் விசும்பிற்பறந்தும்,
 பன்றியாய்ப் பூமியை இடந்தும் தம் உருவம் நீங்கிய பிரமனும் திருமாலும்,
 சென்ற எல்லைகளை அறுதியிட்டுக் காட்ட வைத்த அளவே மதிலும்
 அகழியும் என்னச் சிந்திப்பார்க்குத் தோன்றும்.
      மால்விரிஞ்சர்: ‘உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே,     பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர்’ (தொல்-சொல்-421)
 கபிலபரணர் போலக்கொள்க. விரிஞ்சன்-விரிந்தன்-விரித்தன்-பிரமன்.
 (நுண்ணிய நிலையினின்றும் பருநிலையை ஆக்கினோன்) ஒடுக்கியை
 ஒடுங்கி என்புழிப்போல, அன்று எனவே இன்று என வருவிக்க.
 இம்மூன்று செய்யுள்களானும் அகழியும் மதிலும் ஒருங்கு பேசப்பட்டன.
 		| இடித்த கழ்ந்து தம்இ ருக்கை எற்றி நீர்க்கி டங்கினில் வெடித்தெ ழுந்து தாவு வாளை மீனை மீண்டு றாவகை
 அடுத்து விக்க உண்டு தேக்கி அம்ப ரத்து மீனையுந்
 தடுத்து வென்றி கொள்ள உள்ள சார்ம திற்பொ றிக்குலம்,   42
 |       தம்முடைய இருப்பிடத்தை இடித்து அகழ்ந்து மோதி, நீரையுடைய    அகழியினின்றும் துள்ளி எழுந்து மேல் தாவிய வாளைமீனை மீண்டு
 அகழியை அடையாதபடி மதிலைச்சார்ந்துள்ள யந்திரக்கூட்டங்கள் அடுத்து
 விக்கும்படி விழுங்கி நிறைந்து ஆகாயத்தில் தோன்றுகின்ற மீன் (நட்சத்திரம்)
 களையும் போக்கொழியத் தடை செய்து வெற்றிபெற உள்ளன.
 		| உடல்ப டைத்தி யக்க ஓர்நி மித்தன் உண்டெ னக்கொளத் திடம்வ லித்த சான்ற தாய வனர் தாள்செ யப்படுந்
 தொடர்பு டைப்பொ றிக்கு லஞ்சு ழன்றெ ழும்வி ழும்பகை
 மிடல்கெ டத்தெ ழிக்கும் ஓடும் மீளும் இன்ன நீரவே.    43
 |       உடம்பைப் படைத்து நடாத்த ஓர் கருத்தா (வினைமுதல்) உளன்     என்றிவ்வுணர்ச்சி பெற, உறுதி மிக்க சான்றாகச் சிற்பிகள் தம்முடைய
 முயற்சியால் செய்யப்பட்ட மதிலொடு தொடர்புடைய யந்திரங்களும்,
 பாவைகளும் சுழலும், விழும், எழும். பகைவர் வலிமை கெட உரப்பும்
 (அதட்டும்), ஓடும், மீளும் இத்தன்மையை உடையனவா யுள்ளன.
      அறிவில் யந்திரங்களின் தொழிற்பகுதி அறிவுடைய (நிமித்த காரணன்)    ஒருவனால் அமையப் பெறுவது. அங்ஙனமே, உடம்பும், உடம்பினுட்
 கருவிகளும் சடப்பொருள்களாகையால் அவை தாமே தொழிற்படா.
 அவற்றைப் படைத்தியக்க வல்ல வினைமுதல் உண்டெனத் துணிதல் ஆம்.
 |