| 		| இன்னினி விரைக வல்லே தாழ்க்கலை என்று வேண்டும் அன்னஏ றுயர்த்த புத்தேட் கருந்தவக் கிழவன் கூறும்
 என்னிது புகன்றாய் ஐயா எம்பிராற் கினிய கச்சி
 தன்னைவிட் டகலேன்வீடு தருவதித் தலங்காண் என்ன.  	210
 |       இப்பொழுதே இன்னே மிகவே விரைந்து செல்க ; காலம் நீடவிடற்க     என்று குறையிரக்கும் அன்னக்கொடியை உயர்த்திய நான் முகர்க்கு
 அகத்தியர் கூறுவார்; ‘ஐயனே! என்ன இங்ஙனம் கூறினாய். எம்பெருமானார்க்
 கினிய இருக்கையாகிய காசிநகரை விட்டு நீங்கேன். தன்கண் வாழ்வார்க்கு
 வீடுதருவது இத்தலமே என அறிதி’ எனக் கூற,
 		| வண்டொடு ஞிமிறுந் தேனும் வரிச்சிறைச் சுரும்பும் ஆர்ப்பத் தண்டுளி நறவம் ஊற்றுந் தடமலர்ப் பொகுட்டுத் தெய்வப்
 புண்டரீ கத்தின் மேய புண்ணியன் கேட்டு முந்நீர்
 உண்டுயர் முனிவர் கோமான் உளங்கொள உணர்த்து கின்றான்.	211
 |       வண்டும், ஞிமிறும், தேனும், பாட்டுடைய கரும்பும் ஆரவாரிக்குமாறு    தண்ணியதேன் திவலைகளைச் சிந்தும் விரிந்த தெய்வத் தாமரை மலரின்
 பொகுட்டில் மேவிய புண்ணியனாகிய பிரமன் கேட்டுக் கடல் நீரை
 உண்டுயர்ந்த முனிவரர் ஏறுபோல்வார் திருவுள்ளம் ஏற்குமாறு
 உணர்த்துகின்றான்.
      நால்வகை வண்டு: ‘‘சுரும்புகாள், வண்டுகாள், மகிழ் தேனினங்காள்.....மிஞிற்றீட்டங்காள்’’ (சீவக. குண. 42) காண்க. புண்ணியன் போற்றும்
 புண்ணியர் அகத்தியர் என உணர்த்தினர்.
      வெறுப்பொடு விருப்பொன் றில்லாய் விண்ணவர் இடுக்கண்     தீர்க்கும், திறத்தினை எவ்வாற் றானும் முடிப்பதே சீரி தன்றி,
 மறுப்பது தகாதால் மற்று வயங்கொளி உலக மூன்றும், பெறத்தகு
 கருமம் என்றால் என்னினிப் பேசு மாறே.                   212
      வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலானைச் சார்ந்து     அவை இல்லாதோய்! தேவர் துயரைத் தீர்க்கும் வகையினை எத்திறத்தானும்
 முற்றுவிப்பதே தக்கது ஆகும். அல்லாமல் மறுப்பது தகாத தாகும். மேலும்,
 விளங்கொளியை மூவுலகும் பெறத் தக்க செய்கை எனின், இதற்கு மேலும்
 சொலத்தக்கது உண்டோ?
 		| சீருடைத் ததீசி முன்னோர் வேதர்தம் பொருட்டுத் தங்கள் ஆருயிர்க் கிறுதி நோக்கா துடம்பையும் அளித்தா ரன்றே
 காரியம் இதுமற் றம்ம சிறிதெனக் கருதல் வேண்டா
 ஓரின்வே றுன்னை ஒப்பார் உலகம்மூன் றிடத்தும் இல்லை.  213
 |       சிறப்புடைய ததீசி முனிவரர் முதலோர் தேவர் தம் நலனுக்காகத்     தம்முடைய அரிய உயிரழிவை நோக்காது முதுகென்பு முதலியவற்றையும்
 வழங்கினர் அன்றோ? இச்செய்கையும் அவ்வுபகாரத்தை ஒப்பதே
 |