திருநகரப் படலம் 65


இம்ம திற்பொ றிக்கு லம்எ திர்த்து ளோர்த மைச்செகுத்
திம்மெ னும்முன் வென்றி கொள்ளும் ஈது ணர்ந்து தெவ்விர்காள்
அம்ம ஈண்டு றேல்மின் என்று கைஎ டுத்த சைப்பபோல்
அம்ம தில்த லைத்து கிற்கொ டிநு டங்கு மாலரோ.     44

     இந்த மதிலிலுள்ள யந்திரக்கூட்டம் தம்மோடெதிர்த்த பகைவரை
இம்மென்னு முன் கொன்று வென்றி கொள்ளா நிற்கும். பகைவர்களே இதனை
அறிந்து இவ்விடத்து வாரற்க என்று மேலே கையெடுத்துத் தடுத்தல் போல
அந்த மதிலின் சிகரத்திற் கட்டிய துகிற்கொடிகள் அசையும்.

     ‘இம்மென்னும் முன்’ விரைவுக் குறிப்பு. அம்ம கேட்பித்தற் பொருளது.
‘அம்மகேட் பிக்கும்’ (தொல்-சொல்-276.)

கலிவிருத்தம்

வளமகன் திருநகர்க் கிழத்தி மாமைசால்
இளமுலை திளைப்பக்கார் எழினி சேர்த்துபு
தளர்வற நாட்டிய தம்ப மேயெனக்
கிளர்மதி லிடந்தொறுஞ் செறியுங் கேதனம்.       45

     வளமாகிய தலைவன் கச்சித்திருநகராகிய தலைவியினுடைய அழகிய
நிறமமைந்த இளமுலைப்போகங்கொள்ள அழகிய திரையைச்சேர்த்து நிலை
பெற நிறுவிய தூணென்ன உயர்ந்த மதிலின் பல இடங்களிலும் துகிற்
கொடிகள் செறியும்.

     மகன்-கணவன் ‘நோதகவுண்டோ நும்மக னார்க்கினி’ (சிலப்-16-17)
என்புழிப்போல. மாமை; ‘‘நீர்வள ராம்பற் றூம்புடைத் திரள்கால், நாருரித்
தன்ன மதனின் மாமை’’ (நற்-6)

நேமிமால் வரைமிசைக் கிளைத்து நீண்டவே
யாமெனக் கொடிமிடை அம்பொன் மாமதில்
மீமிசைக் கோபுர மேலுஞ் சேறலால்
யாமினிப் புகல்வதற் குவமை இல்லையே.          46

     சக்கரவாளகிரி என்னும் மலைமேல் முளைத்து நீண்ட மூங்கிலை
ஒப்ப மதில் மேலும். கோபுரத்தின் மேலும் நின்று கொடிகள் நெருங்கி
மேற் செல்லுதலால் அக்கொடிகளுக்கு ஒப்புக்கூறப் பொருளில்லை என்க.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

மகதநா டென்னக் காஞ்சி வைப்பினுங் கடைஞர் எய்தி
இகலற வளர்க்கும் எண்ணான் கறத்தினுக் கிடர்செய் யாமைத்
தகைஅணங் குமையாள் வைத்த தடைநிகர் மதில்சீர் முற்றும்
புகர்அற இயம்பப் புக்கால் புலவர்க்கும் உலப்பு றாதே.  47

     மகத நாட்டில், கீழ்மக்கள் அறத்தினைத் தடை செய்தது போலக்
கச்சித் தலத்தினும் கீழோர் அணுகி, ஒப்பற வளர்க்கும் முப்பத்திரண்
டறங்களுக்கும் இடையூறு செய்யாதபடி அழகினையுடைய காமகோட்டி