650காஞ்சிப் புராணம்


மீட்டும் தொழுது துதி செய்து அழகிய விந்தம் இங்ஙனம் குறையிரக்கும்.

ஐயனே அடியேன் மாட்டும் அருட்பெருங் கருணை வைத்த
செய்யனே அணங்கு லோபா முத்திரை திளைக்குந் தூய
மெய்யனே அலைகள் வீசும் விரிகடல் முழுதும் ஏற்ற
கையனே இனியான் செய்யக் கடவதென் அருளாய் என்ன.   222

     ‘தலைவனே! அடிமையேனிடத்தும் பேரருட் கருணை வைத்தெழுந்
தருளிய செவ்வியனே! தெய்வத் தன்மை யுடைய உலோபா முத்திரை
அம்மை மணக்கும் தூய திருமேனியனே! கடல் நீரை அடக்கிய கையை
யுடையோனே! அடியேன் இப்பொழுது செய்ய வேண்டுவது யாது? அதனை
அருளாய் என்று வேண்ட,

     பொன்னிலம் இருக்கை கொண்டோர் பொருட்டிவண் தென்பால்
ஆசை, தன்னையான் குறித்துப் போந்தேன் சயிலமே மீளுங் காறும்,
இந்நிலை இருத்தி என்னக் கரத்தினால் இருவிக் காஞ்சி, நன்னெடு
நகரம் நோக்கி நடந்தனன் நிகரொன்றில்லான்.               223

     தேவர் பொருட்டுத் தெற்குத் திசையை நோக்கி இவ்வழியாகக்
குறிக்கோளுடன் போந்தேன். மலையே! யான் மீளும் அளவும் இந்நிலையே
இருத்தி என்னக் கையால் அழுத்திக் காஞ்சி மாநகரை நோக்கி நிகர் ஒருவர்
இல்லாதவர் சென்றனர்.

மேற்படி வேறு

செந்நெறி நோக்கி ‘‘அமைந்தாங் கொழுகான் அளவறி கில்லான்
தன்னை வியந்தான் விரைந்து கெடும்’’ எனல் சத்தியங் கண்டாம்
மன்னிய மேரு வரையோ டிகலி வளர்ந்தெழு விந்தம்
முன்னுள தோற்றமும் வீறும் முழுதும் இழந்தது மன்னோ.     224

     நன்னெறியை ஆராய்ந்து அதனில் மனமடங்கப் பெற்று நடவானாய்,
தன்னளவை அறியானாய்த் தன்னையே மதித்துப் பிறரொடு பகை
கொண்டவன் விரையக் கெடுவன் என்னும் திருவாக்கு மெய்ம்மொழி
யாதலைக் கண்டோம். நிலைபெற்ற பெருமையுடைய மேருமலையொடு
பகைத்து வளர்ந் தெழுந்த விந்தமலை முன்னிருந்த தோற்றத்தையும்,
பெருமையையும் முழுதும் இழந்தது அந்தோ!

சங்கர னார்எதிர் தோன்ற மறையுந் தடாதகை தன்னோர்
கொங்கை நிகர்த்தது செல்லுங் குறுமுனி நேருறு குன்றம்
அங்கது கண்ட இமையோர் அனைவரும் அத்திறங் கேட்ட
நங்கையை ஈன் றபொன் மாலை உவகையின் நாற்றி யடைந்தார்.  225

     தடாதகைப் பிராட்டியாரது திருமுன்னார்ச் சிவபிரானெழுந்தருளக்
கண்ட அளவே அம்மையாருடைய நடுக்கொங்கை மறைந்தாலொப்ப
அகத்திய முனிவரர் முன்னின்ற விந்த மலை கரந்தது. அதனைக்