கண்ட தேவர் யாவரும், கொங்கை மறைந்தமை கேட்டு அம்மையைப் பயந்த காஞ்சனமாலை மகிழ்ந்தமையினும் நான்கு மடங்கு மகிழ்ந்தனர். பொன்-காஞ்சனம், திருவிளையாடலுள் தடாதகைப் பிராட்டியார் திரு அவதாரப் படலத்துள் காண்க. முயலாமே அடங்கியமை: ‘பெரியார்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை, தரியா துயர்வகன்று தாழும்-தெரியாய்கொல், பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை, தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து’ என்புழிக் காண்க,. அகத்தியர் காஞ்சியை அடைதல் குன்றிடை முட்டி மறுகுங் குரீஇயின் தடையுண் டழுங்கி நின்ற அருக்கன் முதலோர் நெறிகொளச் செல்ல விடுத்துத் தன்துணைப் பாவையி னோடுஞ் சார்தரு தாபத வேந்து மன்றலம் பூம்பொழிற் காஞ்சி வளகர் தன்னைமுன் கண்டான். 226 | மலையிடை முட்டிக்கொண்டு மனஞ் சுழலும் குருவியைப் போலத் தடைப்பட்டு வருந்தி நின்ற சூரியன் முதலோரைச் செல்வழிச் செல்லவிடுத்துத் தவவேந்தராகிய முனிவர் தம் வாழ்க்கைத் துணைவியோடும் மணங்கமழும் சோலை சூழ்ந்த காஞ்சி என்னும் வளநகரத்தை எதிர்கண்டனர். கண்டு தொழுது வணங்கிக் கையிணை உச்சியிற் கூம்ப மண்டிய காதலிற் புக்கு மரபுளிச் செய்கடன் ஆற்றி அண்டர் பிரானார் தளிகள் அனைத்தும் முறையான் இறைஞ்சிப் பண்டை மறைகள் முழங்கும் படரொளி ஏகம்பஞ் சேர்ந்தான். 227 | கண்டு கைகூப்பி வீழ்ந்து வணங்கி எழுந்து இருகைகளும் முடிமேற் குவியச் செறிந்த பேரன்பொடும் புகுந்து விதிப்படி செயத்தகு கடன்களை முடித்துக் கொண்டு தேவ தேவர் திருக்கோயில்கள் யாவற்றையும் முறையாலே வணங்கிப் பழ மறைகள் எடுத்தேத்தும் பரவுகின்ற ஒளியுடைய திருவேகம்பத்தைச் சார்ந்தனர். செல்வ மணித்திரு வாய்தல் சென்று பணிந்து புகுந்தாங் கல்வளர் கின்ற மிடற்றார் ஆரரு ளென்ன நிறைந்த சொல்வளர் சீர்ச்சிவ கங்கைத் தூநறு மென்புன லாடி எல்வளர் கண்டிகை வெண்ணீ றெங்கும் வயங்க அணிந்தான். 228 | வளமிக்க அழகிய திருவாயிலினை அணுகிப் புகுந்து அவ்விடத்தே திருநீலகண்டர் திருவருளை ஒப்ப நிரம்பிய புகழ் வளர்ந்த சிறப்பினை யுடைய சிவகங்கை என்னும் தூய நறிய தெளிந்த நீரில் மூழ்கி விளக்கம் அமைந்த அக்க வடமும், திருவெண்ணீறும், திருமேனியில் அணியும் இடங்களில் விளங்க அணிந்தனர். வாங்கு நுணங்கிடை பாகர் மாளிகை சூழ்மணி முன்றிற் பாங்கு வலங்கொடு சென்று படரொளி ஆனந்த வெள்ளம் | |