| 		| தேங்குந் தனிமறைச் சூதத் தெய்வத் தருநிழல் மேய வீங்குங் கருணைப் பிழம்பை விழிஎதி ரேகண்டு கொண்டான்.   229
 |       துவளுகின்ற நுண்ணிய இடையினையுடைய பெருமாட்டியைப் பாகம்    கொண்டவரது திருமாளிகைப் பத்தியைச் சூழ்கின்ற திருமுன்பு பக்கங்களில்
 வலங்கொண்டு உள்புக்குத் தழைக்கின்ற ஒளியுடைய பேரின்ப வெள்ளம்
 தேங்கி நிற்கும் ஒப்பற்ற வேத மாமர மாகிய தெய்வத் தருவினது அருள்
 வடிவாகிய நிழலிலே வீற்றிருக்கின்ற தழைக்கும் கருணை வடிவைக்
 கண்களாரக் கண்டனர்.
 		| இணங்கு முறைமையின் அங்கம் எட்டினும் ஐந்தினுஞ் சால வணங்கி மகிழ்ந்து திளைத்து வார்புனல் கண்கள் சொரியக்
 குணங்குறி இன்றி எழுந்த கோலத் திருஉருப் போற்றி
 அணங்கரு மெய்யருள் பெற்று மீண்டனன் ஆர்கலி உண்டான்.  230
 |       பொருந்தும் முறைமையினால் எட்டுறுப்பும், ஐந்துறுப்பும் மண்ணில்    தோயுமாறு பன்முறை வணங்கி மகிழ்ச்சியில் மூழ்கிக் கண்கள் நீர்வார
 நிர்க்குணனாய் வடிவின்றி எழுந்த அழகிய அருவுருவாகிய சிவலிங்கத்தினைக்
 கண்டு போற்றித் துன்பில்லாத மெய்யருளைப்பெற்றுக் கடல் நீரைப்
 பருகியவர் மீண்டனர்.
 		| வன்பழ வல்வினை மாற்றுங் கம்பம் மகிழ்ந்தவர் தென்சார்த் தன்பெய ராற்சிவ லிங்கம் தாபித் தருச்சனை யாற்றி
 முன்பு வரம்பல பெற்று மீமிசை மூண்டெழும் அன்பான்
 மின்புரி செஞ்சடை யாரை மீளப் பழிச்சுத லுற்றான்.     231
 |       பிரவாக அநாதியாய் வரும் கொடிய வினையைக் கெடுக்கும்     திருவேகம்பத்தை விரும்பி இடமாகக் கொண்டவர்க்குத் தென்திசையில்
 அகத்தியேசர் எனப் பெயரிய சிவலிங்கம் நிறுவி வழிபாடு செய்து முதலில்
 வரங்கள் பலவும் பெற்று மேன்மே லுந்தி எழும் பேரன்பினால் மின்னிடும்
 சிவந்த சடைப் பெருமானாரை மீளவும் போற்ற லுற்றனர்.
 அகத்தியர் துதித்தல்	 கொச்சகக் கலிப்பா	 		| இந்நாள் எனக்குப் பயப்பட்ட திப்பிறவி இந்நாள் எனக்குப் பயப்பட்ட தியான்செய்தவம்
 இந்நாள் எனக்குப் பயப்பட்ட தென்னறிவும்
 இந்நாள் உனைக்காணப் பெற்றமையின் எங்கோவே   232
 |       ஏனைய பிறவி யெல்லாம் துணையாக இப்பிறவியே இந்நாளே     எனக்குப் பயன் பட்டது. இந்நாளே எனக்குப் பயன் பட்டது என் அறிவும்.
 எங்ஙனமெனின், இந்நாள் உனைக் காணப் பெற்றமையால் எம்மரசே!
 |