66காஞ்சிப் புராணம்


யம்மை வைத்த தடை ஒத்த மதிலினது சிறப்பு முழுதும் குற்றமறக் கூறப்புகின்
தேவர்க்காயினும் முற்றுறாது.

     இவ்வரலாறு (கச்சி. காஞ். கழு. 87-89) காண்க.

மிடைபுறத் தூர்க ளெல்லாம் விண்ணவர் நகரா அங்கண்
புடைநகர் அயன்ஊ ராகப் பூமகள் கொழுநன் றன்னூர்
இடைநக ராக மற்றை ஈசனார் உலக மேயா
நடைபிற ழாத கீர்த்தி படைத்தஉள் நகரஞ் சொல்வாம்.   48

     புறத்தயலுள்ள ஊர்களெல்லாம் தேவர்நகராகிய அமராவதி ஆகவும்,
அப்புற நகர் பிரமனூராகிய சத்தியலோகமாகவும், இடைநகரம் இலக்குமி
நாயகன் ஊராகிய வைகுந்தமாகவும், சூழச் சிவபுரமாய் விளங்கும் அகநகரின்
சிறப்பைச் சொல்வாம்.

     ‘ஒழுக்கம் வழுவாத புகழ் படைத்த அகநகர்’ என ஈண்டே அதன்
உயர்வை விளக்கினார். புடைநகர், இடைநகர், உள்நகர் என்பன பின்
முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. ‘கீழ் நீர்’ ‘நுனிக்கொம்பர்’
(திருக். 929, 476) என்புழிப்போல.

அகநகர், பரத்தையர் வீதி

அளிமதன் நூலி னாற்றால் ஆடவர் தம்மோ டாடிக்
களிமனைக் குள்ளால் தாங்கள் விளைத்திடுங் கலவி யெல்லாந்
தெளிதர மாடந் தோறுஞ் சித்திரந் தன்னிற் காட்டி
இளையரை மயக்கிக் காமம் ஏற்றுவோர் சேரி மல்கும்.     49

     காமநூல் முறைப்படி ஆடவரோடு கூடித் தாங்கள் நிகழ்த்தும்
புணர்ச்சி விகற்பங்கள் யாவும் தெளிய மகிழ்ச்சியைத் தருகின்ற மனையிடத்து
மாடங்களின் ஓவியங்களில் விளங்க உணர்த்தி அவ்வாடவரை மயக்கிக்
காமம் மிகுவிக்கும் பரத்தையர் சேர்ந்து வாழுமிடம் மிகும்.

     ஓரினத்தோர் சேர்ந்து வாழிடம் ‘சேரி’ ஆயிற்று.

வரிஅளி முரலா வாடா மாலைய இமையா நோக்க
தரைமிசைத் தோயாத் தாள சித்திரந் தயங்கு காட்சி
வரைவிலா மகளிர் இன்னோர் மாண்நலம் வேட்டு வானில்
சுரர்களும் எய்திச் செவ்வி பார்த்துறை தோற்றம் ஒக்கும்.   50

     கீற்றினை உடைய வண்டுகள் ஒலித்தலும், வாடுதலும் இல்லாத
மாலையையும், இமையாத கண்களையும், தரையில் தோயாத கால்களையும்
உடையவாய்ச் சித்திரம் விளங்குகின்ற காட்சி, பரத்தையராகிய அவர் தம்
மாட்சிமைப்பட்ட இன்பத்தை விரும்பி வானிடத்துத் தேவரும்
மண்ணுலகடைந்து காலம் வாயாது அப்பருவத்தை நோக்கிநிற்கும்
தோற்றத்தை ஒக்கும்.

     வண்டு ஒலிக்காத மாலை வாடாமையும், கண்ணிமையாமையும் கானிலந்
தோயாமையும், தேவர்க்கும், சித்திரத்திற்கும் பொதுமையின் இங்ஙனம்
கூறினர். வரைவிலா மகளிர்-‘தந்நலம் விலை கொடுப்பார்