| தாமரை மலரை ஒக்கும் ஒளியுடைய திருமுகம் மலரவும், கடைக் கண் அருள் சிவகாமி அம்மையாரிடத்துப் படரவும், ஐம்பெரும் பூதங்களையும் ஆக்கவும் நிறுத்தவும் அழிக்கவும் வல்ல கெடலரிய புகழையுடைய குறளர் குழாம் கைகொட்டித் தோள்புடைத் தாடவும், ஊன மில்பசுங் கொடியென ஒல்கிநின் றொருபால் கான ளாங்குழல் மலைமகள் கண்டுகண் களிப்ப வான நாட்டவர் கற்பக மலர்மழை பொழியத் தானம் எங்கணும் அரகர சயஒலி தழைப்ப. 305 | குறைபாடில்லாத பசிய கொடியைப்போல ஒதுங்கி நின் றொரு பக்கம் வாசனை வீசுகின்ற கூந்தலையுடைய சிவகாமியம்மை நோக்கிக் கண்கள் களிப்புறவும், தேவர் கற்பக மலர்களை மழையொப்பப்பொழியவும், எவ்விடத்தும் அர அர சய சய (வெல்க) என்னும் பொருளுடைய ஒலி தழைக்கவும், கட்டு வார்முர சாதிய பெருங்கணப் பூதர் எட்டு நாகமும் மாகமும் செவிடுற எழுப்ப மட்டு வார்ந்தெனச் செவியெலாம் அண்ணிக்கும் மதுரம் பட்ட தீங்கிளை நரப்பியாழ் கின்னரர் பயில. 306 | வீக்கிய வார் முரசம் முதலிய வாச்சியங்களைப் பூத கணங்கள் எண்திசை யானைகளும் விண்ணவரும் செவிடு படும்படி முழக்கவும், தேன் பாய்வ தொப்பச் செவிநிரம்பத் தித்திக்கும் சுவையுடைய இனிய கிளை என்னும் நரம்புடைய யாழைக் கின்னரர் மீட்டவும், வேதம் ஆயிரம் ஒருவயின் வெண்குடப் பணில நாதம் ஆயிரம் ஒருவயின் நலங்கிளர் முழவப் பேதம் ஆயிரம் ஒருவயிற் பெரும்புனற் பரவை ஓதம் ஆயிரம் ஆர்த்தெனத் தழங்கொலி ஓங்க. 307 | வேதம் பலவும் ஒரு புறமும், குடம்போலும் வெண்சங்குகள் பலவும் ஒருபுறமும், மங்கல மிகும் பல்வகை மத்தளங்கள் ஒரு புறமும் ஆகப் பெரு நீரையுடைய கடல் பலவற்றின் ஒலியை ஒப்ப ஒலிக்கும் ஒலி பெருகவும், நடிக்கும் அற்புத நாடகங் காண்டலும் புளகம் பொடிக்கும் மேனியன் புனல்பொழி விழியினன் துதிகள் படிக்கும் நாவினன் அஞ்சலி பற்றிய கரத்தன் கடிக்கு றுந்துழாய்க் கண்ணியான் படிமிசை வீழ்ந்தான். 308 | ஞானத் திருக்கூத்தைக் காணுதலும் புளகம் அரும்பிய திருமேனியராய் நீர் வாரும் விழியினராய்த், தோத்திரம் நவிலும் நாவினராய், அஞ்சலி குவித்த கரத்தினராய் மணத்தையுடைய சிறியதுழாய் மாலையை முடியிற் சூடிய திருமால் பூமியிற் படிய வீழ்ந்தனர். |