|      எமது பெருமாட்டியார் மத்தள மாதவேசரை வணங்கிப் பரசி    விரும்புகின்ற காதலினால் பாங்கியரொடும் திருவேகம்பர் பெருமையையே
 கருத்துட்கொண்டு போய்ப் பொன்னினால் இயன்ற ஒளி விளங்கு மகா
 மண்டபத்தைச் சேர்ந்தனர்.
 		| எண்ணில் பன்மணி யாங்கணும் இளவெயில் எறிப்ப வண்ணம் மாண்டபொன் தூண்பல நிரைநிரை வயங்கக்
 கண்ணி றைந்தபே ரழகினுக் கணியெனக் கவின்று
 விண்ண ளாங்கொடி மிடையும் அம் மண்டப வரைப்பின்.  314
 |       அளவில்லாத பல மணிகளும் இளவெயில் காயவும், நிறத்தினால்    மாட்சிமைப்பட்ட பொற்றூண்கள் பலவும் அணி அணியாகத் திகழவும்,
 கண்ணிரம்பிய பேரழகுக்கு அழகென்னும்படி அழகுடைத்தாய் விண்ணில்
 தவழும் கொடிகள் செறியும் அம்மண்டபத்தில்,
 		| சுற்று நீடிய தோழியர் கவரிசாந் தாற்றி பற்றி நின்றிரு பாங்கரும் பணிநனி புரியச்
 சற்றி ருந்திளைப் பாறினாள் எழுந்துமீத் தருக்கு
 முற்றி லாமுலை அந்நலார்க் கின்னது மொழிவாள்.  315
 |       பல் புறமும் நின்ற தோழிமார் கவரி, சிவிறி இவை பற்றி நின்று    இருபுடையும் திருத்தொண்டு நன்கு புரியச் சிறிது இருந்து அயாவுயிர்த்தனர்.
 பின்பு மேலெழுந் திறுமாக்கின்ற இளங் கொங்கையை யுடைய பாங்கியர்க்
 கிதனைக் கூறுவார்.
 		| மன்னு யிர்த்தொகை முழுவதும் மாயையின் மறைப்புண் டின்னல் செய்திரு வினைவலைப் படுங்கள்இவ் வினைதாம்
 உன்னை எம்மைஎம் அடியாரைப் பிணிப்பதொன் றில்லை
 அன்ன தாயினும் அகிலமுந் தெளிந்துய்தற் பொருட்டு.    316
 |       ‘நித்தியமாகிய ஆன்மாக்கள் முழுதும் மாயையினால் மறைப்புற்றுத்    துன்பம் செய்கின்ற புண்ணிய பாவங்களாகிய விலங்கில் கட்டுண்ணும்,
 இவ்வினை உன்னையும், எம்மையும், நம் அடியவரையும் சிறிதும்
 பற்றுவதில்லை. ஆனாலும் பல்லுயிர்களும் தெரிந்து கடைத்தேறும்
 பொருட்டு’
 		| ஆட லான்விழி புதைத்தலின் ஆரிருட் படலம் மூட யாவையும் இடர்க்கடல் மூழ்கிய அதனால்
 கூடும் வல்வினை கழுவுறக் காஞ்சியைக் குறுகி
 நீட நீஎமை அருச்சனை இயற்றுதி நெறியால்.     317
 |       திருவிளையாட்டாற் கண்களை மூடினமையால் தாங்கரிய இருட்புழம்பு     உலகெலாம் மூடிக்கொள்ள பல்லுயிர்களும் துன்பக்கடலில் மூழ்கியமையால்
 சேர்ந்த தீவினை தீரக் காஞ்சியை அண்மி நிலைபெற நீ விதிவழி அருச்சனை
 செய்.
           85	 |