| அம்மையார் வழிபாடு செய்ய எழுந்தருளல்	 கலி விருத்தம்	 		| இன்னணம் பணியெலாம் இகுளை மார்செய மின்னவிர் மணிவடம் சுமந்த வெம்முலைக்
 கன்னிமா மண்டப நின்றுங் காதலால்
 கொன்உமா பத்திரக் கூவல் நண்ணினாள்.       342
 |       இங்ஙனம் எல்லாத் தொண்டுகளையும் சேடிமார் செய்ய ஒளி விளங்கு     மணி மாலையைச் சுமக்கும் கன்னி வடிவில் திகழும் அம்மையார் மகா
 மண்டபத்தினின்றும் காதலுடன் பெருமையுடைய உமாபத்திரக் கிணற்றை
 நீராட நண்ணினர்.
 		| நிறைபரஞ் சுடரடி நினைந்து கூவல்நீர் மறைநெறி விதியுளி வழாமை ஆடியே
 இறுநுசுப் பந்நலார் எடுத்து நீ்ட்டிய
 அறுவையின் ஒற்றிமெய் ஈரம் மாற்றினாள்.       343
 |       சிவபெருமானார் திருவடிகளை நினைந்து நீராட்டு விதிப்படி நீராடி     இடை முரியும் கொல்லோ என்னும் சிற்றிடைப் பாங்கிமார் கொடுத்த
 ஒற்றாடையினால் திருமேனி ஈரத்தைப் போக்கிக் கொண்டனர்.
 		| தேசிகப் பட்டிரண் டுடுத்துத் தீவினை ஆசிரித் தருளும்நீ றாக மெங்கணும்
 பூசிமுப் புண்டரம் பொறித்துக் கண்டிகை
 நேசமுற் றணிந்துசெய் நியமம் முற்றியே.         344
 |       அம்மையார் ஒளியுடைய பட்டாடை இரண்டினை உடுத்துத் தீய    வினையாகிய குற்றத்தைப் போக்கி அருள் செய்யும் திருநீற்றினை மேனி
 முற்றும் பூசி நீரிற் குழைத்துத் திரிபுண்டரமாக அணிந்து உருத்திராக்கத்தை
 விருப்பொடும் தரித்து அனுட்டானம் செய்து கொண்டு,
 		| காவலர் பூசனை புரியுங் காதலான் மேவர வேண்டுவ கொண்டு மெல்லியல்
 பாவையர் புடைவரப் படர்ந்தி ரண்டெனும்
 ஆவர ணந்தனை அணுகி னாளரோ.            345
 |       சிவபூசனையைப் புரியும் விருப்பினால் வேண்டும் உபகரணங்களைக்    கொண்டு மெல்லியலார் தோழிமார் உடன் வர இரண்டாம் ஆவரணத்தினை
 அணுகினர்.
 		| சங்கினம் வயிரொடு தாரை காகளம் பொங்கொலிச் சின்னங்கள் வீணை பூங்குழல்
 வங்கியம் பேரிவார் முரசம் திண்டிமம்
 எங்கணும் கடலுடைந் தென்ன ஆர்ப்பவே.      	346
 |  |