தழுவக் குழைந்த படலம் 681


     சங்குகளும், ஊது கொம்பு, தாரை, காகளம், சின்னம், குழல், வங்கியம்
என்னும் துளைக்கருவிகளும், வீணையாகிய நரம்புக் கருவியும், பேரிகை,
முரசு, தம்பட்டம் என்னும் தோற்கருவிகளும் கடல் மடை திறந்தா லொப்ப
முழங்கவும்,

கின்னரர் கருடர்கிம் புருடர் பாண்செயக்
கன்னியர் எதிர்எதிர் கலவி ஆடிடத்
துன்னிய முனிவரர் துன்றும் வேதியர்
என்னரும் மறைமுழக் கெடுத்துச் சூழவே         347

     தேவசாதியினர் இவர் பாடவும், மகளிர் எதிர் எதிர் கலந்து ஆடவும்,
நெருங்கிய முனிவரரும் தெளிந்த அந்தணர் எவரும் வேதங்களை
எடுத்தோதிச் சூழவும்,

ஐவகைப் பிரமமும் அங்கம் ஆறும்ஓர்
கைவளர் முகனுடைக் கடவுள் வேழமும்
கொய்விரைக் கடம்பணி கோவும் ஓகையான்
வைகும்அச் சூழலை வலங்கொண் டெய்துவாள்.    348

     பஞ்சப் பிரம மந்திரங்களும், சடங்க மந்திரங்களும் அடங்கிய
பிரணவத்தை ஓர் துதிக்கை வளர் முகமாகவுடைய யானைமுகக்
கடவுளும், கடப்ப மலர் மாலையை அணிந்த முருகப் பெருமானாரும்
எழுந்தருளியிருக்கும் இருக்கையை வலம் வந்து அடைந்தனர்.

ஐங்கரப் பிள்ளையை நிருதி ஆசையில்
செங்கைவேல் இளவலை உலவைத் திக்கினும்
உங்குறு பூசையின் உவப்பச் செய்துபோய்
மங்கல நந்திவாழ் வாய்தல் நண்ணியே.          349

     மூத்த பிள்ளையாரைத் தென்மேற்காகிய நிருதி திக்கினும், இளைய
பிள்ளையாரை வடமேற்காகிய வாயு திக்கினும், மிகு பூசனையால்
மகிழ்வுறுத்திப் போய் மங்கல குணங்களையுடைய நந்திபிரானா ருறையும்
திருவாயிலை நணுகி,

வாயிலோர் பூசனை மரபின் ஆற்றினாள்
மாயிரு மறைத்தனி மாவின் நீழல்வாழ்
நாயனார் தமைவிழி நயப்பக் காண்டலும்
மீயுயர் காதலான் வீழ்ந்தெ ழுந்தனள்.           350

     துவார பாலகர் பூசனையை முடித்துச் சென்று வேத மாமரத்தின்
நீழலில் வாழ்கின்ற திருவேகம்ப நாதரைக் கண்களிப்பக் கண்டபொழுதே
மிக்குயர்ந்த பெரு விருப்பினால் வணங்கி எழுந்தனர்.

ஒருங்கிய மனத்தின் அஞ் செழுத்தும் ஓதியே
கருங்குழற் கற்றைமேற் குவித்த கையொடும்