| 		| பெருங்களி துளும்பிஉள் புகுந்து பிஞ்ஞகர் மருங்குற முறைமுறை வணங்கி ஏத்தினாள்.       351
 |       ஐம்பொறி வழிச் செல்லாது ஒன்றுபட்ட உள்ளத்தினால்     அஞ்செழுத்தையும் ஓதிக் கரிய கூந்தற் றொகுதிமேற் கூம்பிய கரத்தொடும்
 துள்ளிய பெருங்களிப்பொடும் உள்ளே புகுந்து அருகணைய விதித்தபடி
 வணங்கி வணங்கித் துதித்தனர்.
 		| முருகலர் மாவடி முளைத்த தீஞ்சுவை அருள்விளை அமுதினை ஆரக் கண்களால்
 பருகினள் பன்முறை பழிச்சி அண்ணலார்
 கருணையே நோக்கிவெங் களிப்பின் நீடினாள்.    352
 |       வாசனை விரியும் மலர்களைக் கொண்ட மாவின் அடியில்     வெளிப்பட்ட இனிய சுவையுடைய திருவருளைச் செய்யும் அமுதாகிய
 பெருமானாரைக் கண்களால் நிரம்பப் பருகினர், பலமுறை போற்றி
 அண்ணலார் திருவருளையே உளங்கொண்டு களிப்பி லழுந்தினர்.
 		| விழிகள்ஆ னந்தநீர்த் தாரை மெய்யெலாம் பொழியநெக் குருகினள் புளகம் போர்த்தனள்
 மொழிதடு மாறினள் அறிவின் முற்றிய
 தொழில்அமை பூசனை தொடங்கல் மேயினாள்.    353
 |       கண்கள் ஆனந்த வெள்ளத்தை மெய்ம்முழுதும் பொழியுமாறு    திருவுள்ளம் நெகிழ்ந்து உருகினர்; புளகம் மூடினர்; நாக்குழறினர்; அறிவின்
 முதிர்ந்த பணியாகிய பூசனையைத் தொடங்கலுற்றனர்.
 அம்மையார் வழிபாடு செய்தல்	 அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| வழுவறு தோற்ற மாதி வழுக்கிய பாவத் தீமை கழுவநின் பூசை இந்நாள் கடைப்பிடித் தருளால் செய்கேன்
 முழுதருள் வழங்கி ஊறு நீக்கிமுன் னின்று கோடி
 செழுமதி முடியாய் என்று சங்கற்பம் செய்து கொண்டாள்.   354
 |       பிறையை முடித்த பெருந்தகையே! குற்றமற்ற படைப்பு முதலிய    தொழில்கள் தடைப்படத் திருக்கண்களைப் புதைத்தமையால் ஆகிய
 கொடிய தீவினையைப் போக்க நின் பூசனையை இப்பொழுது மேற்கொண்டு
 திருவருளை முன்னிட்டுச் செய்வேன். இடையூறகற்றி முழுதும் அருளை
 வழங்கி முன்னின்று பூசனையை ஏற்றுக் கொள்ளுதி,
 		| பூமுதல் பூத சுத்தி புரிந்தகப் பூசை ஆற்றிக் காமரு மலரும் வாச வருக்கமும் கலந்த தெண்ணீர்த்
 தோமில்பாத் தியமே ஆச மனம்அருக் கியந்தூய் தாக்கி
 மாமுரல் இதழித் தாரார் முடிமிசை மலரை மாற்றி.    355
 |  |