| 		| துன்புற நோக்கி நெஞ்சந் துண்ணெனத் துளங்கி ஆவா உம்பர்வான் தடவிச் செல்லும் ஒப்பரும் பெருநீர் வெள்ளம்
 எம்பிரான் மிசையே நண்ணும் இனிச்செய்வ தென்னே என்று
 தம்பிரா னார்பால் அன்பு தழைந்தெழும் உள்ளத் தோடும்.   376
 |       வருத்தம் மிக நோக்கி மனந் திடுக்கிட்டுக் கலங்கி அந்தோ! வான்    விசும்பைத் தடவிப்போகும் உவமம் இல்லாத பெருநீர் எமது பெருமான்
 மேல் நணுகும். இனிச் செய்யத் தக்கது என்னோ! என்று உயிர்களின்
 தலைவர் மாட்டுப் பொங்கி எழும் அன்புடைய உள்ளத்தோடும்,
 		| அட்டொளிப் பசும்பொன் மேனி வடிவெலாம் அதிர்ப்புக் காட்டப் பொட்டணி நுதலின் பாங்கர்க் குறுவெயர்த் திவலை பூப்ப
 மொட்டிள முலையில் தூங்கும் முத்தொளி வடங்கள் ஆட
 இட்டிடை வருந்திச் சால இறுமெனத் துவண்டு வாட,        377
 |       சுடப்பட்ட ஒளியுடைப் பசிய பொன்னொக்கும் திருமேனி வடிவ    முற்றும் நடுக்குறவும், திலக மணிந்த நுதலில் குறுவெயர் வரும்பவும்,
 அரும்பனைய இளைய கொங்கைகளில் தொங்கும் முத்தமாலைகள்
 அசையவும் சிறிய இடை பெரிதும் வருந்தி முரியுமெனத் தளர்ந்து வாடவும்
 		| கூந்தலின் நறவந் தோய்ந்த குருமலர்ச் சுரும்பர் ஆர்ப்ப ஏந்தகல் அல்குல் சூழ்ந்த எரிமணிப் பருமம் ஆர்ப்பச்
 சேந்தொளி பிலிற்றுஞ் செம்பொற் கிண்கிணி சிலம்போ டார்ப்பக்
 காந்துபொற் கடகக் கையிற் கதிர்வளைக் குலங்கள் ஆர்ப்ப   378
 |       கூந்தலில் தேன் மருவிய நிறமுடைய மலரில், வண்டுகள்     ஆரவாரிக்கவும், ஏந்தி அகன்ற அல்குலின் மேலிட்ட ஒளிவிடு மணிமேகலை
 ஆரவாரிக்கவும், சிவந்து சுடர் விடும் செம்பொன்னா லாய கிண்கிணியும்
 சிலம்பும் ஆரவாரிக்கவும், ஒளி வீசுகின்ற பொன்னாலாய கடகமணிந்த
 கையில் வளைகள் ஆரவாரிக்கவும்,
 		| ஒருகொடி எழுந்து செம்பொன் உயர்வரைக் குவடு தன்னை இருகொழுந் திருபாற் போக்கித் தழீஇயென எழுந்து வல்லே
 முருகலர் வேதி உம்பர்த் தன்வல முழந்தாள் ஊன்றிக்
 கருமணிப் பாவை யன்னாள் கணவரைத் தழுவிக் கொண்டாள்.
 |       ஓர் பொற்கொடி வளர்ந்து மேரு மலைச் சிகரத்தை இருதளிரை    இருபுறமும் செலுத்தித் தழீஇக் கொண்டாற்போல விரைய எழுந்து மணம்
 விரியும் சிவலிங்க பீடத்தின்மேல் தம்முடைய வலது முழந்தாளை ஊன்றி
 நீலமணியாற் செய்யப் பெற்ற படிமத்தை ஒப்பவர் கணவரை இறுகத் தழீஇக்
 கொண்டனர்.
 |