| அம்மையாருக்கு இறைவன் திருவருள் செய்தல்	 கலி விருத்தம்	 		| என்றுளம் நெக்குருகி எல்லையில் அன்பினளாம் மன்றல் மலர்த்தொடையல் வார்குழல் போற்றிசெயக்
 கொன்றை முடிச்சடையார் பேரருள் கூர்ந்தருளித்
 துன்றிய கேண்மையினான் மற்றிது சொல்லினரால்.  	409
 |       என்று மனம் நெகிழ்ந்து உருகி அளவிட லரிய அன்புடையராய்     மணமுடைய மலர் மாலை சூடிய ஏலவார் குழலி யம்மையார் போற்றி
 செய்யக், கொன்றை மலர் மாலையைச் சடையி லுடையவர் பேரருள் மீக்
 கூர்ந்து செறிந்த உரிமையினால் இதனை அருளுவர்.
 		| பொங்கி மணங்கமழப் பூசு நறுங்களப மங்கல மென்முலையாய் காளி மகிழ்ந்திதுகேள்
 அங்கனை நின்னொடுநாம் வேறலம் ஆரமுதத்
 திங்களும் வெண்ணிலவும் போலு மெனத்திகழ்வோம்.  410
 |       ‘மணம் மிக்குக் கமழும்படி நறிய கலவையைப் பூசு நலமுடைய மென்    முலையாய்! காளீ! (கறுப்பி) அங்கனையே! இதனை மகிழ்ந்துகேள். நின்னொடு
 வைத்து நாம் வேறலம்; ஒருவே மாவேம். அரிய அமுதத்தைப் பொழியும்
 சந்திரனும் அதன் வெள்ளிய நிலவும் போலக் குணகுணியாய் விளங்குவோம்.
 		| இலளிதை யாம்பெயரான் முன்இவண் எம்உருவிற் பலர்தொழ வந்துலகம் பங்கய னாதியெலாம்
 மலர்தர நல்கினைபின் மற்றொரு கற்பமதிற்
 சலமறு மெய்ஞ்ஞான சத்தியின் நீங்கியரோ.       411
 |       ‘இலளிதா தேவி என்னும் பெயரோடு முன்னர் எம் வடிவினின்றும்    பலரும் தொழத் தோன்றி உலகையும், பிரமன் முதலான யாவரையும்
 ஒடுங்கிய நிலையினின்றும் விரிதரப் படைத்தனை. பின்பு வேறொரு
 கற்பத்தில் கோட்ட மறுக்கும் மெய்ஞ்ஞான சத்தியாகத் தோன்றி,
 		| அந்தண னுக்கருளி ஆக்கிய துப்புதவிக் கந்த மலர்க்கடவுள் கான்முளை தன்மகளாய்
 நிந்தனை செய்தவனை நீத்து வரைக்கிறைபால்
 தந்து மறித்தும்எமை அன்பின் மணந்தனையால்.   412
 |       ‘பிரமனுக்கு அருள் செய்து படைக்கும் ஆற்றலை வழங்கி அப்    பிரமனுக்கு மகனாகிய தக்கனுக்கு மகளாய்த் தோன்றிப் பழித்த அத் தக்கனை
 வெறுத்துநீ ங்கி இமய மன்னனுக்கு மகளாகி வந்துமீண்டும் எம்மை
 அன்பொடும் மணந்து கொண்டனை.’
 |