700காஞ்சிப் புராணம்


     ‘இத்திருமணம் கவுரி திருமணம் என்றுலகிற் பேசப்பட வேண்டும்.
செம்மை விளங்க ஐந்தாண்டுடைய கன்னியாக யான் இங்கே சிறந்த
காரணத்தால் கடலுலகில் பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையும்
மூங்கிலை யொக்கும் தோளினையும் உடைய மகளிர் எவரும் ஐயாட்டைக்
கன்னியர் கவுரியர் எனப் பெயர் பெறுதல் வேண்டும்.’

     ஏராளும் ஐயாண்டிற் கன்னியரைச் சைவநெறி மறையோர்க்
கீயூஞ், சீராளர் குலமுதலோர் சிவலோகந் தனிற்சிவணப் பெறவும்
வேண்டும், காராளும் மணிமிடற்றாய் எனத்தொழுது வணங்குதலும்
காமற் காய்ந்த, பேராளர் திருவுள்ளஞ் செய்தருளிப் பெருங்கருணைக்
கூர்ந்து சொல்வார்.                                    424

     அழகுறும் ஐந்து வயதுடைய கன்னிப் பெண்களைச் சிவ
நெறியிலொழுகும் பிரமசாரிகளுக்கு மணஞ் செய்யும் சிறப்பினருடைய
குடியினரும் சிவலோகந் தன்னைச் சேரப் பெறுதலும் வேண்டும். திருநீல
கண்டம் உடையோய்!’ என்று கூறித் தொழுது நிற்றலும் காமனைக் கனற்றிய
பெருமையார் திருவுள்ளம் இசைந்து பெருங்கருணை மிக்குக் கூறுவார்.

     திருத்தகுவண் காஞ்சிதனில் ஆண்டுதொறும் பங்குனிஉத்திரநாள்
யார்க்கும், அருத்திபுரி திருவிழா நிகழ்ந்தீற்றின் வதுவை நமக் கமைவ
தாகப், பொருத்தமுறக் காண்டியெனத் தமிழ்முனிக்கன் றருள்புரிந்தேம்
அதனால் பாவக், கருத்துடைக்கும் பிலத்தயலே யாண்டுதொறுங்
கடிநமக்கு நிகழ்வ தாக.                                 425

     ‘செவ்விய வளமுடைய காஞ்சியில் ஆண்டுதோறும் பங்குனித்
திங்களில் வரும் உத்திர நாளில் யாவர்க்கும் விருப்பத்தைச் செய்கின்ற
திருவிழா நடைபெற்று விழா முற்றுப்பெறும் அந்நாளில் திருமணம் நமக்குக்
கூடுவதாகக் காண்’ என்று அகத்தியர்க் கன்றருள் புரிந்தோம். ஆகலான்
வினையால் வரும் பிறவியைப் போக்கும் பிலத்தின் மருங்கே வருடந்தோறும்
திருமணம் நமக்கு நிகழ்வதாகும்.

     கல்யாண மண்டபத்தின் உனக்குரிமைத் தொழில்மறையோர்
கன்னி செய்ய, எல்லாரும் இதுகண்டு களிப்புறுக இன்னும்
உனக்காண்டு தோறும், நல்வாய்மை அறம்வளர்க்கும் வித்தாநெல்
இருநாழி தருகேம் அந்த, நெல்லாலே இகபரத்தும் உயிர்ப் பைங்கூழ்
தழைகஎன நிறுவல் செய்தார்.                              426

     ‘கல்யாண மண்டபத்தில் உனக்குரிய சடங்குகளைப் பார்ப்பனக்
கன்னியர் செய்ய யாவரும் இதனைக் கண்டு களிப்பு மிகுக. இன்னும்,
வருடந்தோறும் நல்லுண்மையொடு கூடிய அறத்தை வளர்க்கும் இரு
நாழி அளவையுடைய நெல்லை விதையாக உனக்குக் கொடுப்போம். அந்
நெல்லால் இம்மை மறுமைகளினும் உயிராகிய பசிய பயிர்கள்தழைப்பதாக’
எனக் கட்டளையை நிறுத்தினார்.