718காஞ்சிப் புராணம்


     மாட்சிமையுடைய செந்தமிழ் முனிவராகிய அகத்தியர் திருவுள்ள
நினைவும் அழகு தக்கிருக்கும் கவுரியாகிய அம்மையார் திருவுள்ளக்
கருத்தும் முற்றுப் பெற்றன. வேண்டியவற்றை வேண்டியவாறே வழங்கும்
மெய்யருளை அந்நாள் ஆண்டகையார் விளக்கினார் போலும்.

கலிநிலைத் துறை

திரும ணத்திறங் கண்டவர் யாவருஞ் செழுந்தேன்
பருகு வண்டென ஆனந்த வெள்ளத்திற் படிந்தார்
உருகி ஏத்தினர் கையிணை உச்சியிற் குவித்தார்
இருக ணீர்மழைத் தாரையின் மூழ்கிஇன் புற்றார்.   66

     திருமணக் காட்சிகளைக் கண்டவர் யாவரும் வளமுடைய தேனைப்
பருகிய வண்டெனப் பேரின்பப் பெருக்கில் மூழ்கினர்; உள்ளம் கரைந்து
போற்றினர்; இருகைகளையும் தலைமிசைக் கூப்பினர்; இருகண்கள் பொழிந்த
நீர்ப்பெருக்கில் திளைத்து இன்பம் மிக்கனர்;

மலைக்கொ டிக்குறு கவுரமெய் வடிவும்வள் ளலுக்கிம்
முலைச்சு வட்டொடு வளைத்தழும் பணியும்முன் நோக்கிச்
சிலைத்த டம்பனி வரைமிசைத் திகழ்மணக் கோல
நிலைக்கு மற்றிது ஏற்றம் இங் கெனநெடி துவந்தார்.     67

     இமயவல்லியார்க்கு உண்டாகிய பொன்னிறத் திருமேனியையும்,
முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணியாக வள்ளலார்க்கு வாய்த்தமையின்
இவற்றையும் முனைத்து நோக்கி இமயமலையில் நிகழ்ந்த திருமணக்
காட்சியினும், அம்மையார் பொன்னிறமும், திருவேகம்பர் சுவடுகளும்
முன்னில்லனவாய் இப்பொழு துண்மையின் ஏற்றமுடைத் திது என்றொப்பு
நோக்கிப் பெரி துவந்தனர்.

அலகில் ஓகையில் திளைப்பஇப் பேறெமக் களித்த
மலைய மாமுனி வாழிய வாழிஎன் றுரைத்தார்
குலவு மங்கலம் பாடினர் ஆடினர் குழைந்தார்
தலைவி பாகனும் அவரவர் தமக்கருள் வழங்கி.    68

     அளவில்லாத பெருமகிழ்ச்சியில் படியுமாறு இப் பேற்றினை
எமக்கருளிய அகத்தியர் என்றென்றும் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தினர்.
விளங்கு மங்கலம் பாடினர்; கூத்தாடினர்; அன்பினால் குழைந்தனர்.
அம்மையைப் பாகங் கொண்டவரும் யாவர்க்கும் திருவருளை வழங்கி,

இறைவன் திருவுலாப் போதல்

எட்டு மாதிரக் கரிகளும் உடல்பனிப் பெய்த
நெட்டு யிர்ப்பெறி மதுகைவெள் விடைமிசை நீல
மட்டு லாங்குழல் மடவர லொடுமகிழ்ந் தேறிச்
சிட்டர் போற்றிட மறுகிடைத் திருவுலாப் போந்தான்.   69