கொடையே வெற்றிக்குக் காரணம் ஆதலின் ‘வள்ளல்’ என்றனர். காத்தலின் வல்லவர், காவலர். செய்ய திண்புயத் தெழிலினைக் கவர்ந்தமை தெரிந்து வெய்ய மாந்தர்கள் வெதும்புறப் பன்முறை தாக்க ஐய வோஎன அலறுவ போல்அணி முழவம் மைய வேலையுஞ் சமழ்ப்புற வயின்தொறுங் கறங்கும். 67 | தொழில் திறத்தால் விரும்பப் படுகிற முழவம் வாசிப்போர், தம்முடைய செவ்விய திண்ணிய தோளழகைக் கரந்து கவர்ந்தமையைத் தெரிந்து கைப்பற்றி வருந்தும்படி பலமுறையும் தாக்குவர்போல முழக்க ஐயவோ என அரற்றுவ போல அழகிய மத்தளம் கரிய கடலும் ஒலியாது நாணும்படி அரங்குகள் தோறும் ஒலிக்கும். மைய-மேகங்களுக்கு இடனாகிய எனினும் ஆம். குங்குமக்குழம்பால் செய்ய ஆகிய என்க. அணி, இலக்கணம். விலாழி நீரும்ஒண் சந்தன விரைச்செழுஞ் சேறுங் குலாய வீதிகால் வழுக்குமென் றஞ்சுபு கோணல் நிலாமு டித்தவர் திருவிழாத் தொழவந்து நெருங்கும் வலாரி யாதியோர் அடிபடி உறாவகை நடப்பார். 68 | யானையும், குதிரையும் உமிழ்ந்த நீரும், நறுமணம் கலந்த செஞ்சந்தனக்குழம்பும் கூடி விளங்கிய வீதிகளில் நடந்தால் சறுக்கு மென்றஞ்சியே வளைந்த இளம்பிறையைக் கண்ணியாக முடியிற் சூடிய சிவபெருமான் திருவிழாச் சேவிக்க வந்து குழுமும் இந்திரன் முதலியோர் அடிகள் நிலத்தில் தோயாதபடி உலவுவார். புரசைத் திண்களி றுலாத்தரும் பொலஞ்சுடர் மறுகிற் பரசப் போதரும் மன்னவர் பணிமுடி நெருக்கின் அரசப் பன்மணி தெறித்துவீழ்ந் திமைப்பன அவியா முரசப் பேரொலி அதிர்ப்பினில் உக்கமூ துடுப்போல். 69 | கழுத்திடு கயிற்றையுடைய களிறுகள் உலவுகின்ற பொன்னொளி வீசும் அரசவீதிகளில் இறைவனை வணங்க நெருங்குகின்ற அரசர்கள், மணிமுடி ஒன்றொடொன்று தாக்கி உதிர்ந்து வீழ்ந்த நாயக மணிகள், முரசொலி ஓயாது முழங்குகின்ற அதிர்ச்சியினால் உதிர்ந்த பெரிய நட்சத்திரங்களைப் போலச் சுடர் விடுவன. அங்கண் வீதியின் அணிநலங் காணும்ஆ தரத்தின் எங்கள் நாதனுந் திருவிழா என்பதோர் பெயரான் மங்கை யாளொடும் மகாரொடும் வானவர் பழிச்சத் திங்கள் தோறெழுந் தருளுமேல் அதன்வளஞ் சிறிதோ. 70 | |