| அற்புத இலிங்கங்கள் 		| தீண்டில் யாவையுஞ் செய்யபொன் னாக்குவ திறலின் மாண்ட சித்தர்கள் எண்ணிலர் வழிபடப் படுவ
 வேண்டில் என்னவும் அளிப்பன மெய்த்தவ முடையோர்
 காண்ட கும்பல இலிங்கம்அக் கடிநகர் உளவால்     3
 |       யாதோர் பொருளையும் பரிசித்தால் அதன் இயல்பினை மாற்றிப்     பொன் ஆம்படி செய்வனவும், வல்லமையால் மாட்சிமைப்பட்ட சித்தர்கள்
 அளவிலார் வழிபடப்படுவனவும், விரும்பிய பொருள் எத்திறத்தன ஆயினும்
 வழங்குவனவும் உண்மைத் தவமுடையோர் காட்சிக்கே புலனாவனவுமாகிய
 இலிங்கங்கள் பல அக்காவ லமைந்த நகர்க்கண் உள்ளன.
 		| ஒருத னிப்பொருள் இருதிற னாகிஉவ் விரண்டும் ஒருமை யுற்றிடும் வியப்பும்அங் குள்ளது விரிக்கில்
 ஒருப ரம்பொருள் சிவனொடு சத்திஎன் றிரண்டாம்
 ஒருமை யுற்றிடும் உமையவள் கம்பரைத் தழுவி     4
 |       ஒப்பற்ற ஒரு பொருள் இருபகுப்பாகி அவ்விரண்டும் பின்பு ஒன்றுபடும்     அதிசயமும் அங்குள்ளது. அதனை விரித்துரைக்கில் ஒப்பற்ற பரம் பொருள்
 சிவமும் சத்தியுமென இரண்டாய் அச்சத்தியாகிய உமையம்மையார் பின்பு
 திருவேகம்பரைத்தழுவி ஒன்று படும்படி விளங்கும்.
 		| இருமை ஓர்பொருள் எண்ணில வாதலும் எண்ணில் பொருள்கள் ஒன்றெனத் திகழ்தலும் உடைத்தது புகலின்
 ஒருசி வச்சுடர் பற்பல வடிவுகொண் டுறையும்
 மருவு பன்மறை ஒருதனி மாவென வயங்கும்        5
 |       இருதன்மை (சச்திசிவம்) யுடைய ஓர் பொருள் எண்ணில்லாதன    ஆதலும் அளவில்லாத பொருள்கள் ஒரு பொருளாய்த்தோன்றுதலும்
 அங்குடைத்து. விளக்கிச் சொன்னால். ஒன்றாகிய சிவபரஞ்சுடர் பற்பல
 வடிவங்கள் கொண்டு வீற்றிருக்கும், பலவாய் மருவும் மறைகள் ஒப்பற்ற
 தனி மாமரமாய் விளங்கும்.
 பதினோ ரற்புதம்	 		| மற்று மூன்றிடம் வேதிகை வயல்கள்நாற் றவிசு பொற்ற ஐந்தருத் தடம்அறு புட்கள்ஏழ் பொதியில்
 பற்றும் எண்பொய்கை ஒன்பது சிலைபொழில் பத்தாங்
 கொற்ற மன்றுபத் தோடொரு கூவலுங் குலவும்.      6
 |       மேலும், மூன்றிடங்கள், மூன்று திண்ணைகள், மூன்று வயல்கள்,     நான்கு தவிசுகள், ஐந்து தருக்கள், ஐந்து தடாகங்கள், ஆறுபறவைகள்,
 |