ஒழுக்கப் படலம் 735


பெருமறை ஓதுதல் பிரம எச்சம்இவ்
விருமகம் ஐந்தனுட் பிரம எச்சந்தான்
திருமிகச் சிறத்தலில் தெய்வ வேதியர்
ஒருதலை யாகஈ தோம்பல் வேண்டுமால்.          19

     வேதம் ஓதுதல் பிரமயாகம் எனப்படும் இவ்வைந்து வகையுள்
பிரமயாகம் தெய்வத் தன்மை மிக்கமையால் தெய்வத் தன்மையையுடைய
பிராமணர் துணிவாக இதனைக் கடைப்பிடிக்கவேண்டும்.

வைகறை எழுந்துசெய் வினைகள் மாண்டகச்
செய்துமா நகர்ப்புறத் தொழுகுந் தெய்வநீர்
எய்தினர் குடைந்துவெண் டுகில்இ ரண்டுடுத்
தைதுறு கண்டிகை நீற ணிந்துபின்.               20

     விடியற் காலையில் துயிலெழுந்து காலைக் கடன்களை முடித்த
பின்பு பெரிய நகரின் மருங்கே ஓடும் ஊறும் நதி முதலிய தீர்த்தங்களை
அடைந்து மூழ்கி வெள்ளிய ஆடை இரண்டனை உடுத்து அழகு மிகும்
உருத்திராக்கமும் திருநீறும் அணிந்ததன் பின்,

வண்புதல் தருப்பைமேல் வைகி மும்முறை
ஒண்புனல் வேதங்கள் உவப்ப ஆசமித்
தெண்பெற வாய்துடைத் தியல்பில் தீண்டியே
பண்பயில் மறைகள் படித்தல் வேண்டுமால்.        21

     தருப்பாசனத்தில் இருந்து வேதங்கள் மகிழத் தெய்வநீரை ஆசமனம்
செய்து கருத்துடன் வாயைத் துடைத்துத் தொடுமிடங்களை மந்திரத்துடன்
மோதிர விரலால் தொட்டுச் சந்தத்துடன் கூடிய வேதங்களை ஓதுதல்
வேண்டும்.

மாதவப் பேற்றினான் மறைகள் அண்ணலைச்
சூதமாய் நிழற்றிலின் தொல்லை ஏகம்ப
நாதனுக் கினியதிப் பிரம நன்மகம்
மேதகும் அறங்களுள் மிக்க தாகுமால்.            22

     பெருந்தவப் பயனால் வேதங்கள் பெருமானுக்கு மா மரமாய் நிழல்
செய்தலின், இப்பிரமயாகம் (வேதம் ஓதல்) திருவேகம்பப் பெருமானுக்கு
உவப்பாவது. மேன்மை பொருந்திய அறங்கள் பலவற்றுள்ளும் தலையாயதும்
ஆகும்.

ஆற்றலுக் கியையஎவ் வளவைத் தாயினும்
போற்றரு மறையினைப் போற்றி மேதகச்