|      தவத்தினாற் செருக்கல் கண்டது விளம்பல் பொய்யுரை     சாற்றுதல் ஐந்தும், அவித்தஅந் தணரை இகழுதல் யாதும் அளித்தது
 புகழ்ந்தெடுத் துரைத்தல், எவற்றினை யானுங் கொலைசெயல் பிறர்பால்
 இடுக்கணை யுறுத்தல் குறளை, செவிப்புகப் புகறல் பூப்புடை மனையைத்
 தீண்டலும் வழுவெனப் படுமால்.                            40
      தவஞ்செய்து இறுமாப்புறல், கண்டவற்றைப் பறைசாற்றல், பொய்ம்    மொழியைப் பரப்புதல், ஐம்பொறிகளைப் புறஞ்செலாது அடக்கிய
 அந்தணரைப் பழித்தல், மிகச்சிறு கொடையையும் தற்பெருமை பாராட்டல்,
 வறிதேயும் கொலைசெயல், பிறரைத் துன்புறுத்தல், புறங்கூறலைக் கேட்க
 விரும்புதல், புறங்கூறல், மாதவிடாயுற்ற மனைவியைத் தீண்டல் ஆகிய
 இவை குற்றம் எனப்படும்.
      மனைவியோ டுண்டல் அவளுடன் துயிறல் மனைவிஆ வித்துழிப்     பசிப்பில், வினைஇகந் தியல்பான் இருப்புழி உண்ணும் வேலையும்
 ஆங்கவட் பார்த்தல், கனைகதிர்க் தேவைக் கிழக்கெழுங் காலை
 மேற்கடற் பால்விழுங் காலைப், பனிவிசும் புச்சி யுற்றிடுங் காலைப்
 பார்த்தலும் பழுதெனப் படுமால்.                           41
      மனைவியை உடன்வைத் துண்ணல், கலந்தபின் வேறு துயிலாது     அவளுடன் துயிலல், அவள் கொட்டாவி விடும்போதும் பசித்துள்ள போதும்
 வேலையின்றி இருக்கும்பொழுதும் உண்ணும்பொழுதும் அவளை நோக்குதல்,
 சூரியன் எழும்பொழுதும், மறையும்பொழுதும், உச்சிப் போதும் ஆகிய இம்
 முக்காலங்களில் சூரியனைக் காணுதல் ஆகிய இவையும் குற்றம் எனப்படும்.
          உடையொழிந் திருநீ ராடுதல் ஆடை ஒன்றுடுத் துண்டல்ஈ    ரியக்கம், நடைவழிச் சாம்பர் ஆனிலை தீநீர் நள்ளுற விடுதல்ஆங்
 குமிழ்தல், உடையிலா மாதை நோக்குதல் இருகால் ஒளிர்ந்தசெங்
 கனலிடைக் காய்ச்சல், இடையுறும் அந்தி வேலையின் அருந்தல்
 இவைகளும் விலக்கெனப் படுமால்.                         42
      பெரிய நீர்நிலைகளில் உடையின்றி நீராடல், ஆடை ஒன்றுடுத்     துண்ணல், வழியிலும், பசுக்கள் கூடுமிடத்திலும், தீயிலும், நீரிலும், சலம்
 மலம் விடுதல், அவற்றில் எச்சி லுமிழ்தல், நிருவாண மகளிரை நோக்கல்,
 நெருப்பிடைக் காலைக் காய்ச்சல், சூரியன் மறையும் அந்திப்போதில்
 உண்டல் இவைதாமும் வழுவெனப்படும்.
      இந்திர திருவில் விசும்பிடை நோக்கி ஏனையர்க் கறிவுறக்    காட்டல், நிந்தையின் வாளா பேரிகல் விளைத்தல் கையிணை
 குவித்துநீ ரருந்தல், செந்தழற் கடவுள் வான்பசு பார்ப்பார்
 |