742காஞ்சிப் புராணம்


தேவர்கள் ஞாயிறு குரவர், இந்துவின் முன்னர் இச்சையாறிருத்தல்
இன்னவுந் தீங்கெனப் படுமால்.                            43

     வானவில்லைப் பிறர்க்குக் கண்டு காட்டல், பழித்தற்குரிய பெருஞ்
சண்டைகளை வறிதே கொள்ளல், இரு கைகளால் முகந்து நீரைப் பருகல்,
வேள்வித் தீ, சிறந்த பசுக்கள், பார்ப்பனர், தேவர், சூரியன், ஆசிரியர்.
சந்திரன் இவர்முன் நல்லிருக்கை கொள்ளாமல் மனம்போன படி இருத்தல்
ஆக இவையும் குற்றம் எனப்படும்.

     கேழுகிர் உரோமந் துணித்திடல் உகிராற் பல்லினைக்
கிளைத்திடல் தனியே, பாழ்மனைத் துயிறல் கண்படை எழுப்பல்
முடிவடபாலின்வைத் துறங்கல், ஆழ்துரும் பொடித்தல் ஓட்டினை
அடித்தல் தனிவழிச் செலல்பிறர் அணிந்த, காழகஞ் செருப்பு முதலிய
அணிதல் இனையவுங் கடிந்திடப் படுமால்.                   44

     நிறமுடைய நகம் மயிர் இவற்றைக் களைதல், நகங்களாற் பற்களைத்
கீறுதல், குடியில்லாத பாழ்மனையில் தனியே துயிலல், உறங்குவோரை
எழுப்புதல், வடதிசையில் தலையை வைத்து உறங்கல், துரும்புகிள்ளல்,
பிறருடைய செருப்பு, உடை இவற்றை அணிதல் ஆகிய இவையும்
வழுவெனப்படும்.

     அறக்கடை மிகும்ஊர் பெரும்பிணி யுறும்ஊரு் அமர்இழி
குலத்தவர் பதிதர், மறக்கொடுந் தொழிலோர் துவன்றும்ஊர் வைகல்
வரையிடை நெடும்பொழு துறைதல், இறப்பரும் இசும்பின் ஏறுதல்
இழிதல் இளவெயிற் காய்தல்நீ ராடா, துறப்பெருஞ் சிவலிங்
கார்ச்சனை புரியா துண்டலும் வழுவெனப் படுமே.            45

     பாவிகள், பெருநோயர், தாழ்குலத்தவர், சண்டாளர், கொடும் பாவச்
செயலைப் புரிவோர், ஆகிய இவர்கள் மிக்கிருக்கும் ஊர்களில் தங்குதல்,
மலையில் நெடுங்காலம் இருத்தல், கடத்தற்கரிய நீரூறும் மலைச்சரிவில்
ஏறுதல் இறங்கல், காலை வெயிலில் இருத்தல், நீராடல் சிவபூசனை இவை
தவிர்ந் துண்ணல் ஆகிய இவையும் குற்றங்கள் எனப்படும்.

     பூத்தவள் பதிதன் இழிஞனை அழத்தைப் புத்தரைத் திகிரிமேற்
பொறித்த, மூர்த்தியைத் தீண்டல் காண்டலும் விலக்கே இலங்குமுப்
புண்டரம் இன்றி, மீத்திகழ் வடிவம் முதலிய பொறித்த வேதியர்
முகத்தினை மறந்தும், பார்த்துளோர் கம்பத் தலைவனைப் படர்ந்து
கண்ணுறின் நண்ணுவர் தூய்மை.                           46

     பூப் பெய்தினவளையும், ஒழுக்கமிலாதவனையும், இழிசனனையும்,
பிணத்தையும் அருகனையும் தீண்டுதலும், காணுதலும் குற்றங்களாம்,