| நடுவிலும் பனிக்காலங்களிலும் நீருளும் நின்று தவம்செய்து நெகிழ்ந்த    உள்ளத்தனாகி உஞ்சவிருத்தி பெற் றுண்டு தங்குக.
 		| கண்டிகை நீறு தாங்கிக் கம்பனைக் காம நோக்கின் ஒண்டொடிப் பிராட்டி தன்னை உன்னிஅஞ் செழுத்தும் எண்ணி
 அண்டர்கோன் பூசை யாற்றி அன்னணம் வதிந்த பின்னர்
 மிண்டரும் வனத்தின் வாழ்க்கை மெய்த்தவ முதிர்ச்சி யாலே.  54
 |       உருத்திராக்கம் விபூதி இவற்றைத் தரித்துத் திருவேகம்பரைப்    பெருமாட்டியொடும் நினைந்து திருவைந்தெழுத்தைச் செபித்துத் தேவதேவன்
 பூசனையைப் புரிந்து அவ்வாறு வதிந்த காலை வானப்பிரத்த வாழ்க்கையில்
 உண்டாகிய உண்மைத் தவத்தின் முற்றுப் பேற்றினாலே,
 		| அற்றமில் அறிவில் தூய ராகிஇவ் வுலக வாழ்வும் பொற்றபூங் கமல வாழ்க்கைப் புண்ணியன் முதலோர் வாழ்வும்
 பற்றற வெறுத்து வீட்டின் அவாவுறும் பான்மை பெற்றான்
 முற்றுறத் துறவின் எய்தி முறைமுடி புணர்தல் வேண்டும்.  55
 |       குற்றமற்ற அறிவுடைமையால் மனந் துயராகி இவ்வுலக வாழ்க்கையிலும்,    பிரமபதம் முதலாம் பதங்களிலும் உள்ள பற்றினை முற்றவும் வெறுத்
 தொழித்து வீடு பேற்றில் விருப்புமிகும் இயல்பினைப் பெற்றவன் (சந்நியாசம்)
 முழுத் துறவினை எய்தி வேதாந்தப் பொருளை உணர்தல் அவசியம்.
 		| ஐந்தவித் துயர்ந்த ஆசான் றன்புடை அருள்நூல் கேட்டுச் சிந்தனை செய்து மாணத் தெளிந்துபின் நிட்டை மேவும்
 இந்தவா றடைவின் எய்தும் இயல்பினைத் தலைநின் றேறூர்
 அந்தணன் இருதாள் என்றும் அகந்தழீஇ ஒழுகல்ஆறே.    56
 |       ஐம்புலன்களை வென்றமையால் உயர்ந்த ஆசாரியனிடத்து அருள்    நூலைக் கேட்டுச் சிந்தித்து மிகத் தெளிந்து பின் நிட்டை கூடும்
 இவ்வியல்பினை ஒன்றன்பின்னொன்றாக அடையும் நிலையைத் தலைப்பட்டு
 விடையூரும் பெருமானார்தம் திருவடிகளை என்றும் உள்ளத்துள் தழுவி
 ஒழுகலே முறையாகும்.
 		| அடற்கொடும் பாசம் மாற்றிப் பசுக்களை அருள்வீட் டுய்ப்பப் படைத்தளித் தழித்து நோக்கும் பரம்பொருள் சிவனே என்றல்
 உடற்றுநர்க் கரிய வேத உள்ளுறை யாவ தென்னத்
 தொடக்கம்ஈ றெழுவா யான இலிங்கத்தால் துணிதல் கேள்வி.   57
 |       வலியுடைய கொடிய மலங்களின் வலியைக் கெடுத்து ஆன்மாக்களை    முத்தியிற் செலுத்தும் பொருட்டுப் படைத்துக் காத்து அழித்து
      94	 |