| அனைத்திற்கும் குடி புகும் இடமாய்ப் புறந்தோலால் மறைக்கப்படும்    மிக்கிழிந்த உடம்பே உயிரை வருத்தப் படுத்திடும். வேறோர் நோய் மிகை;
 இல்லையுமாம்.
 		| பெரும்பிணி இதனைத் தீர்க்கும் மருத்துவன் பிறவி யில்லாப் பரம்பொரு ளான முக்கட் பரமனே என்று தேறி
 முரண்பயில் விடையோன் தென்பால் முகத்தினைச் சரணம் எய்தி
 விரும்பிவீ டுறுதற் பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார்.   	65
 |       பிறப்பினை அஞ்சப்பெற்றவரே தீரா நோயாகிய இப் பிறவி நோயைத்     தீர்க்கும் வயித்தியநாதன் தனக்குப் பிறப்பில்லாத முதற்பொருளான
 முக்கண்களை யுடைய பரமனே என்று தெளிந்து வலிமை மிக்க விடையை
 உடைய பெருமான் அகோர முகத்தை அடைக்கலம் அடைந்து விரும்பி
 வீட்டினைப் பெறுதற்குப் பக்குவராவர்.
 கலிநிலைத் துறை	 		| மற்றைத் தெய்வங்கள் எவற்றையும் விடுத்துமா நீழற் கற்றைச் செஞ்சடைப் பிரான் சரண் சரணெனுங் கருத்தே
 பற்றிச் சாவினும் வாழ்வினுங் களிப்பிகல் படாமை
 எற்றைப் போதும்ஒத் தொழுகலே துறந்தவர்க் கியல்பாம்.   66
 |       பிற தெய்வங்களைத் தொழாது மாவடியில் வீற்றிருக்கும் தொகுதி    கொண்ட சிவந்த சடைப்பெருமானார் திருவடிகளே புகலிடம் எனத்
 துணிவு கொண்டு சாதல் வாழ்தல் இவற்றுள் ஒன்றை விரும்பியும் ஒன்றனை
 வெறுத்தும் திரிவுபடாது ஒரு தன்மையராய் எக்காலத்தும் சமநிலை
 பெற்றொழுகுதலே துறந்தவர்க்கு முறையாகும்.
 		| பொறுமை கல்விமெய் தூய்மைஐம் பொறிதெறல் அடக்கம் உறுதி நாண்வெகு ளாமைகள் ளாமைஒண் பூதி
 மறுவில் சாதனஞ் சிவார்ச்சனை தியானம்வண் பதினான்
 கறமும் நல்லறம் புரிபவர்க் கிலக்கண மாமால்.         67
 |       பொறுமை, கல்வி, தூய்மை, ஐம்பொறி, அடக்கல், அடக்கம், உறுதி,     நாணம், சினமின்மை, கள்ளாமை, விபூதி, சிவசின்னம், சிவபூசனை, தியானம்
 ஆகிய இப்பதினான்கும் நல்லற நெறி நிற்போர்க்குப் பொருந்திய
 இலக்கணங்களாகும்.
 		| சொன்ன நால்வகை நிலைகளில் துரிசற ஒழுகிக் கன்னி மாநிழற் கண்ணுதல் அகத்தொழும் பாற்றி
 மன்னி நீடிய காஞ்சிமா நகர்வயின் வதிவோர்
 துன்னு மும்மலத் துகள் அறுத் தின்பவீ டுறுவார்.   	68
 |  |