பழம்பகையும் மறுக மாட்டி, வயக்கமுறு சிவபதத்தின் உய்க்கும்இலங் கயில்வாளாய் மாறா வாழ்வு, பயக்கும்நுதல் விழிக்கடவுள் நயக்கும்அருட் சிவலிங்கப் பதிட்டை யம்மா. 3 சிவலிங்கப் பிரதிட்டையின் பயன், கலக்கம் உறுத்தும் பாவமாகிய விலங்கைத் தறித்துப் புவனபோகங்களாகிய பெருஞ்சுமையை நீறாக்கி மூலகன்மத்தையும் பிறவிக் கேது வாகிய மூலமலத்தையும் கெடுத்து விளக்க மிக்க சிவலோகத்திற் கொண்டு செலுத்தும் கூரிய வாளாகி நிலைத்த வாழ்வினைக் கொடுக்கும் என அறிக. விரைமலரோன் மணிவண்ணன் முகில்ஊர்தி முனிவர்சித்தர் விண்ணோர் யாரும், வரைகளிலும் வனங்களிலும் வார்ந்தநதிப் புடைகளினும் மணிநீர் வேலைக், கரைகளினும் எங்கெங்குங் கண்ணுதலோன் சிவலிங்கப் பதிட்டை ஒன்றே, உரைவிளங்கச் செய்தமைத்தா ரன்றிரவே றெவன்செய்தார் உணர்வான் மிக்கீர். மெய்யறிவினீர்! தேவரும், முனிவரும், அசுரரும் பிறரும் சிவ பூசனையையே செய்து உய்ந்தனர். மேதகைய தவம்தீர்த்தங் கொடைவேள்வி துறவுநிலை விரதம் யாவும், ஓதுசிவக் குறிநிறுவும் பயன்கோடி படுங்கூற்றின் ஒன்றுக் கொவ்வா, ஆதலின் இச் சிவலிங்கம் வேதிகையி னொடுஞ்சிலையான் அமைப்போர் யாரும், ஏதம்அறுத் தவ்வுடம்பின் வீடெய்தப் பெறுவர்இதற் கையு றேன்மின். 5 தவமுதலாம் பலவும் தரும் பயன்கள், சிவலிங்கம் தாபித்ததனால் ஆம் பயனுக்குக் கோடியின் ஒரு கூற்றுக்கும் ஒப்பாகா. ஆகலின், பீடத்தொடும் கூடிய சிவலிங்க வடிவைக் கல்லால் அமைத்துத் தாபித்தவர் எடுத்த இப்பிறவிலேயே ஐயமின்றி முத்தியை எய்துவர். இம்முறையில் தாபித்த சிவலிங்கம் இறைஞ்சுநரும் விமான மேல்கொண், டம்மலர்ப்பூங் குழற்பணைத்தோள் அரம்பையர்சா மரையிரட்ட அமரர் போற்ற, எம்மருங்கும் இசைமுழங்கப் பெருந்தேவர் அழுக்கறுப்ப இனிதின் ஏகிச், செம்மல்அருட் சிவலோகத் தானந்தந் திளைத்துறைவார் பிறவுங் கேண்மோ. 6 இவ்வாறு நிறுவிய சிவலிங்கத்தை வணங்கினவரும், மூங்கிலை ஒக்கும் தோளுடைய தேவ மகளிர் பணி செய்யவும் விண்ணவர் போற்றவும் போகங் கண்டு உள்ளம் புழுங்கவும் ஆக விமானத்தின் வழியே சிவலோகம் புகுந்து பேரின்பத்தில் மூழ்குவர். மேலும், கேண்மின். |