ஆபற் சகாயர் கணங்கள் கலுழி மதக்கடவுள் கதிர்வேற் குரிசில் எழுமாதர், நிணங்கொள் திகிரிப் படைஏந்தல் நிலவெண் டோட்டு மலர்ப்புத்தேள், அணங்கு நவக்கோள் முனிவரர்சூழ்ந் தணுக்க ராகப் பொலந்தவிசின், இணங்கும் ஆவற் சகாயனெனும் இறைமைப் பெருமான் திருவுருவம். 27 விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சத்தமாதர், திருமால், பிரமன், சிவகணங்கள், வருந்துகின்ற நவக்கிரகங்கள், முனிவரர் ஆக இவர் புடை தழுவி நெருங்கி இருப்பப் பொன் தவிசில் வீற்றிருக்கும் ஆபற் சகாயர் திருவுருவம், சோதிலிங்கேச்சுரர் கடைக்கால் வெள்ளப் பெரும்புணரி நாப்பட் கதிர்த்த சுடர்இலிங்கத், திடைப்பால் மதியம் முடிவயங்கத் தோன்றி விசும்பின் எகினமுங்கீழ்த், தொடைப்பூந் துளபச் சூகரமுந் துலங்க முடிமேற் கரங்குவித்துப், படைப்பான் முகுந்தன் வலம்இடமும் பரவத் திகழ்வோன் திருவுருவம். 28 ஊழிக்காலப் பெருவெள்ளத்தின் நடுவே ஒளிகொண்ட சோதிலிங்க வடிவுடன் பால் போலும் நிறமுடைய பிறை முடியில் விளங்கத் தோன்றி மேலே அன்னமும் கீழே துழாய் அணிந்த திருமாலாகிய பன்றியும் காணும்படி சிரமேற் கரங்கூப்பிப் பிரமனும் திருமாலும் இடமும் வலமும் போற்றுதல் செய்யச் சோதி லிங்கேசுவரராய்த் தோன்றும் திருவுருவம். மச்ச சங்காரர் வானம் பழிச்ச வலைமாக்கள் வடிவு தாங்கி வலம்புரிக்கை மீனம் படுத்து விழிசூன்று விரல்மோ திரத்தின் எவ்வுயிர்க்கும் ஞானம் பயப்பக் குருவிந்த நலங்கேழ் மணிபோற் பதித்தணிந்த கானம் படித்துச் சுரும்புளருங் கடுக்கைத் தொடையோன் திருவுருவம். | விண்ணோர் வேண்ட வலைஞர் திருமேனி தாங்கிப் பாஞ்ச சன்னியம் உடைய திருமாலாகிய அவதார மீனின் கண்ணை இடந்து அதனால் செருக்கு அகற்றி மோதிரத்திற் பதித்த வயிரம்போலக் கொண்டு விரலில் அணிந்து பாட்டிசைத்து வண்டுகள் சூழும் கொன்றை மலர் மாலையை அணிந்த மச்ச சங்காரர் திருவுருவம், கூர்ம சங்காரர் மகரந் திளைக்குங் கடல்ஏழும் மலங்கக் கலக்கும் பசுந்துளவ முகைவிண் டலர்தார் ஆமைதனைப் பற்றித் தகர்த்த முதுகோடு | |