நகுவெண் டலைமா லிகையணிக்கு நடுநா யகமாக் கோத்தணிந்து புகரின் றுயர்ந்தோர் தொழப்பொலிந்த புத்தேள் செல்வத் திருவுருவம். 30 | சுறாமீன் வழங்கும் கடல்கள் ஏழனையும் கலங்கக் கலக்கும் அவதார ஆமையைப் பற்றிக் கோட்டினைப் பறித்துத் தலைமாலை அணியின் இடையே நாயகமாக விளங்க அணிந்து குற்றமின்றி உயர்ந்தோர் தொழும்படி விளங்கும் கூர்மசங்காரர் திருஉருவம், வராக சங்காரர் சுழிக்கும் புனல்ஏழ் கடல்சுவற்றி மலைகள் ஏழுந் துகள்படத்தீ விழிக்குங் கடவுட் பன்றியினை விறல்வே டுருக்கொண் டெழுந்தருளி அழித்தங் கொருவெண் கோடுபறித் தணிந்து மற்றை இடக்கோடு பழிச்சுந் துதிகேட் டுளம்இரங்கி விடுத்த பகவன் திருவுருவம். 31 | எழுகடலையும் வற்றச் செய்து எழுமலையையும் நீறாக்கும் செந்தீச் சிந்தும் திருமால் கொண்ட அவதாரப் பன்றியினை வேட்டுவ வடிவம் கொண்டு தோன்றி வலக்கோட்டினைப் பறித் தணிந்து துதிகேட்டு இரங்கி இடக்கோட்டினை விடுத்தவராம் வராக சங்காரர் திருவுருவம், நரசிங்க சங்காரர் நன்னா லிரண்டு திருவடியும் நனிநீள் வாலும் முகம்இரண்டும், கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும்பே ரார்ப்பும் எதிர்த்தோற்றிச், செந்நீர் பருகிச் செருக்குநர மடங்கல் ஆவி செகுத்துரிகொண், டொன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான் சரபத் திருவுருவம், 32 எட்டுத் திருவடிகளும் மிக நீண்ட வாலும் இருமுகங்களும் அச்சந் தோன்றும் சிறகுகளும் உக்கிரமும் கொடிய பெரிய முழக்கமும் தோன்றும் வடிவுடன் தோன்றி இரணியனது இரத்தத்தைக் குடித்து வெறிகொண்டு கேடு செய்த நரசிங்கத்தைக் கொன்று அதன் உரியைப் போர்வையாகக் கொண்ட சார்த்தூலத்தின் வடிவொடு விளங்கும் நரசிங்க சங்காரர் திருவுருவம், கங்காளர் குறளாய் அணைந்து மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந் திறலான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை இறவே சவட்டி வெரிந்எலும்பை எழிற்கங் காளப் படையென்ன அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்க ணாளன் திருவுருவம். 33 | |