சிவபுண்ணியப் படலம் 759


     மாவலி முன் வாமனனாய்க் குறுகி மூன்றடி மண் இரந்து பெற்றுப்
பின் நெடியோனாய் மூவுலகையும் சூழ்ச்சியால் அளந்து அம்மாவலியைச்
சிறையிலழுத்திச் செருக்கிய திருமாலை அழியுமாறு அழித்து முதுகெலும்பை
அழகிய கங்காளம் (முழு எலும்பு) ஆயுதமென்று அறவோர் ஏத்தக்
கைக்கொண்ட கண்ணோட்ட முடைய பிரானைக் கங்காளர் எனப் பேசப்
பெறும் திருவுருவம்,

காலபைரவர்

பொலங்கொள் பங்கிமுகரோமம் பொலிய உமையோ டம்புயம்போல்
அலர்ந்த விழிகள் இரண்டும்அது முகிழ்த்தா லனைய நுதல்விழியும்
இலங்க இரவி நடுவிளங்கி இருவர் இகல்போ தயன்சிரங்கொய்
தலங்கும் உகிரான் மருங்கமர அமர்ந்த பெருமான் திருவுருவம்.  34

     பொன்னிறமுடைய சடையும், மீசையும் பொலியவும் செந்தாமரை மலர்
போலும் மலர்ந்து சிவந்த இரு விழிகளும் அம்மலர் குவிந்தாலனைய நெற்றி
விழியும் விளங்க, மலரவனும் மாலும் உலகிற்கு முதல்வரெனத் தம்முட் போர்
செய்யும் காலைச் சூரிய மண்டிலத்தினின்றும் தோன்றிப் பிரமன் சிரத்தைக்
கொய்து அவ்வெற்றி விளங்கும் நகத்தொடும் உமையம்மையுடனிருப்ப
விளங்கும் கால பைரவர் திருவுருவம்,

பிட்சாடனர்

அடியில் தொடுத்த பாதுகையும் அசைந்த நடையும் இசைமிடறும்
வடிவிற் சிறப்ப நடந்தருளி மூழை ஏந்தி மருங்கணைந்த
தொடியிற் பொலிதோள் முனிமகளிர் சுரமங் கையரை மயல்பூட்டிப்
படியிட் டெழுதாப் பேரழகாற் பலிதேர் பகவன் திருவுருவம்.    35

     திருவடியில் பூண்ட மிதியடியும், அடியிட்ட நடையும், சாம கண்டமும்
வடிவிற் புலப்பட எழுந்தருளி வந்து பிச்சைச் சோறு கொணர்ந்த முனிவரர்
மனைவியராகிய கலங்காத பெண்டிரைக் காமுறுத்திப் பிரதி (ஒப்பு) இட்டு
எழுதலாகாப் பேரழகொடும் பலி தேரும் பிட்சாடனர் திருவுருவம்,

பதிட்டைப் பயன்

என்று மறைஆ கமம்வகுக்கும் இன்னோ ரன்ன திருவுருவுள்
ஒன்று காஞ்சித் திருநகரில் உடைய பெருமான் ஏகம்ப
மன்றல் கமழும் மலர்வாவி மதில்சூழ் கோயில் அகவரைப்பின்
நன்று மகிழ்ந்து விதியாற்றாற் பதிட்டை புரிந்த நலமுடையோர்.  36

     என்று வேதா கமங்கள் வகுத்துணர்த்தும் திருவுருவங்களுள்
ஒன்றனைக் காஞ்சிமா நகர்க்கண் ஆளுடைய திருவேகம்பர் தம் மணங்