760காஞ்சிப் புராணம்


கமழும் பொய்கையும், மதிலும் சூழ்ந்த கோயிலினுள் பெரிதும் விரும்பி
விதிப்படி தாபித்த பேறுடையோர்.

     எண்ணில் கோடி இளம்பரிதி குழீஇக்கொண் டெழுந்தா
லெனவயங்கி, விண்ணை விழுங்கும் வளரொளிசூழ் விமான
மேல்கொண் டிருமருங்கும், வண்ண மணிச்சா மரைஇரட்ட
வானோர்முடிகள் அடிவருடத், தண்ணென் நறும்பூ மழைபொழியத்
தனிவெண் கவிகை மிசைநிழற்ற                             37

     அளவில்லாத இளஞ் சூரியர்கள் ஒருங்குகூடி யிருந்தாற்போலச்
சுடர்விரித்து விண்முழுவதையும் தன்னுள் அகப்படுத்தும் ஒளியுடைய
விமானத்தில் வீற்றிருந்து கவரி இருமருங்கும் வீசவும் தேவர்தம் முடிகள்
அடியைத் தடவும்படி வணங்கவும், மலர்மழை பொழியவும், ஒப்பற்ற
வெண்குடை நிழல் செய்யவும்,

     மிதுனம் பயிலுங் கின்னரங்கள் மெய்சோர்ந் தணுகிப்
புடைவீழப், பொதுளுந் தருக்கள் கனிந்துருகிப் புதுப்பூங் கொம்பர்
தலைகுரங்க, மதுரங் கனிந்த மென்கிளவி மடவார் பாடும்
மிடற்றிசையும், முதிருஞ் சுவைத்தீங் குழல்இசையும் முதல்யா
ழிசையுந் தலைமயங்க.                                    38

     யாழ் இசையிற் றிளைக்கின்ற கின்னரப் பறவைகள் மெய்ம்மறந்து
அருகில் வீழவும் செறியும் தருக்கள் முறுகி உருகிப் புதிதாய்த் தழைத்துத்
தலைவளையவும் ஆகச் சுவைமிக்க மெல்லிய சொற்களைப் பேசும் மகளிர்
பாடும் கண்டத்து இசையும், இனிய குழலின் கனிந்த இசையும் தலைமை
அமைந்த யாழின் இசையும் ஒருங்குகூடவும்.

     பண்ணின் மழலைத் தேன்துளிப்பப் பனிப்பூங் கதுப்பில்
தேன்துளிப்பக், கண்ணும் விரலும் புடைபெயரக் கண்டோர் மனமும்
புடைபெயர, வண்ண மணிமே கலைஇரங்க மறுகும் இடைக்குவேள்
இரங்க, விண்ணின் வாழ்க்கை மெல்லியலார் மின்னுக் கொடிபோல்
எதிர்நடிப்ப,                                           39

     பண்ணுடன் கூடிய மழலைச் சொல்லாகிய தேன் வாயினின்றும்
பொழியவும், குளிர்ந்த மலரணிந்த கூந்தலினின்றும் தேன் துளிப்பவும் கண்
பிறழவும் விரல்கள் நரம்பின்மீதும் துளைகளின்மீதும் நடப்பவும் காணும்
காமுகர் உள்ளமும் ஊசலாடவும் அழகிய மணிமேகலை அரற்றவும்,
மன்மதன் இடைமுறியும் கொல் என்று இரங்கவும் தேவ மகளிர் மின்னற்
கொடியை ஒப்ப எதிரே நிருத்தம் செய்யவும்,

சென்று சேர்ந்து பன்னெடுநாட் சிவலோ கத்திற் பரபோகம்
நன்று நுகர்ந்து பின்நெடுமால் நளினக் கிழவன் வாசவன்சீர்