| தொழுதுபோற் றிசைத்துச், சுற்றுபூம் பொதும்பர்த் தடம்புனற்     காஞ்சிச் சூழலுட் பயிக்கம்நன் குதவப், பெற்றவர் பெறும்பே
 றிற்றெனக் கிளத்தல் பெரும்பணித் தலைவர்க்கும் அரிதே.        47
      பற்று முற்றவும் சிவபெருமான் திருவடியிற் பதித்து உடற்பற்றும் அற்ற    குற்றமற்ற மெய்யுணர்வினால் பெருந்துறவு பூண்ட அன்பர்தம் திருவடிகளைப்
 போற்றி செய்து சோலைகளும், நீர்நிலைகளும் சூழ்ந்த காஞ்சியில் அவர்க்குப்
 பிச்சை நன்கு வழங்கினவர் பெறும் பயனை முற்றக் கூறுதல் ஆயிரம்
 நாவுடைய ஆதிசேடனுக்கும் அமைவதன்று.
      பொருள்நிலைக் கேற்ப ஓவியத் தலத்திற் புகரறு படாந்தனில்     அனைய, திருவடி வங்கள் எழுதிவைப் பவருங் தீவினை துணித்துவீ
 டடைவார், அருமறை மிருதி சிவாகம புராணம் அனைத்தினும்
 புகன்றவா புகன்றாம், மருள்நிலை கழித்த மாசறு தவத்தீர் மற்றுள
 தருமமும் புகல்வாம்,
      தங்கள் வருவாய்க்குத் தக்கவாறு சுவரில், குற்றமற்ற திரைச்     சீலைகளில் முற்கூறிய திருவுருவங்களைச் சித்திரமாகத் தீட்டிவைப்பவரும்
 தீய வினைகளைக் கெடுத்து முத்தியைச் சேர்வர். வேதமுதலாம் நூல்களில்
 கூறியபடி கூறினோம். சகலநிலை நீங்கிக் குற்றமற்ற தவத்தைக் கைக்
 கொண்டீர்! வேறுள்ள பல சிவதருமங்களையும் எடுத்துக் கூறுவாம்.
 சிவாலயம் எடுத்தற் பயன்	 கலிநிலைத் துறை	 		| வளங்கொள் கச்சிமா நகர்மறு கிடைவிளை யாடும் இளஞ்சி றார்களும் புழுதியிற் சிவாலயம் இயற்றிக்
 கிளர்ந்து போற்றினுஞ் சிவபுரங் கெழுமுவ ரென்றால்
 விளங்கு காஞ்சியிற் சிவாலயம் எடுப்பதே வேண்டும்.   49
 |       செல்வ வளம் கெழுமிய காஞ்சிமா நகரிடை வீதியில் விளையாடும்    சிறுவரும் மணலாற் சிவாலயம் எடுத்து அன்பு கிளர்ந்து போற்றுவரேல்
 புகழால் விளங்கும் அக்காஞ்சியிற் சிவாலயம் எடுப்பதே செயத்தக்கது.
 		| ஈட்டு கின்றதம் பொருள்வரு வாயினுக் கிசைய ஊட்ட ருஞ்சுடர் மணிகளிற் கனகத்தின் ஒட்பங்
 காட்டு தாதுவில் வெள்ளியிற் சுதையினிற் கனலின்
 வாட்டு செங்கலின் மரத்தினின் மண்ணினா னாதல்.   50
 |       முயன்று தேடுகின்ற பொருள் வருவாய்க்குத் தக்கவாறு இயல்பாக     ஒளிவீசும் மணிகளே ஆகப் பொன்னே ஆக ஒளியுடைய
 |