| செம்பே ஆக ெள்ளியே ஆகச் சுண்ணாம்பு நெருப்பிற் சுட்ட செங்கல்,     மரம், மண் என்னும் இவற்றின் ஒன்றே ஆகக் கொண்டு,
 		| கந்த மாதனம் பனிவரை நீலம்வான் கயிலை மந்த ரந்திகழ் ஏமகூ டம்வளர் நிடதம்
 முந்து பொன்வரை முதற்குல வரைப்பெய ரொன்றாற்
 சந்த மேனிலைக் கோபுரம் மண்டபந் தயங்க       51
 |       கந்தமாதனம், இமாசலம், இந்திரநீலப் பருப்பதம், கயிலை மந்தரம்,     ஏமகூடம், நிடதம், மேரு எனப் பெறும் சிறப்புடைய மலையின் பெயர்
 ஒன்றைத் தாங்கிய அழகிய மேனிலைகளையுடைய கோபுரமும், மண்டபமும்
 விளங்குமாறு.
 		| விளங்கு நாகரந் திராவிடம் வேசரம் மற்றுங் கிளந்த வற்றுளோர் பெற்றியிற் கெழுவுபே ரன்பால்
 துளங்கு வெண்டிரைக் கருங்கடற் சுடுவிடம் பருகிக்
 களங்க றுத்தவன் ஆலயங் காண்டக எடுப்போர்.  	52
 |       வடமொழி, தென்மொழி, தெலுங்கு என்னும் இம்மொழி நூல்களுள்    பிறமொழி நூல்களுள் விதித்தபடி பேரன்பினால் திருநீலகண்டமுடைய
 சிவபெருமானுக்குத் திருக்கோயில் சமைப்போர்,
 		| மேவும் அவ்வமால் வரைநிகர் விமான மேல் கொண்டு தேவர் மாலயன் முனிவரர் சித்தர்ஏத் தெடுப்பக்
 காவி நேர்மிடற் றெம்பி ரான் கயிலையை நண்ணி
 ஓவ ரும்பெரும் போகம்உண் டுறைந்துவீ டடைவார்.   53
 |       முன்சொல்லப் பெற்ற மலைகளின் பெயரொடு கோபுரம் அமைத்தவர்     அவ்வம் மலையை ஒக்கும் தெய்வ விமானத்தில் திருமால் முதலானோர்
 புகழ்ந்து போற்றிச் சூழ்ந்துவர நீலமலரை ஒக்கும் விடமுண்ட கண்டர்தம்
 கயிலையை நண்ணி ஒழி வரிய பெரும்போகத்தை நுகர்ந்து தங்கி முடிவில்
 வீட்டினைத் தலைப்படுவர்.
 புதுக்குதற் பயன்	 		| முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய நெரிந்த வாகிய கோபுரம் நெடுமதில் பிறவுந்
 தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு
 புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங் குறுவார்.    54
 |       முரிந்தும், வெடித்தும், உடைந்தும், பழமை உற்றும், நெளிந்தும்     வேறுபட அழிந்தும் கிடக்கும் கோபுரம், பெருமதில் முதலாம் பிறவற்றையும்
 முன்போலச் சிறக்குமாறு புதுப்பிப்போர் (சீரணோத்தாரணம் செய்வித்தோர்)
 முன் அவற்றை எடுத்தவர் பெறும் பேற்றினும் நான்கு மடங்கு பயனை
 எய்துவர்.
 |