766காஞ்சிப் புராணம்


அணிந்த சிவனாரது ஆலயத்தை மெழுகுவார்க்கு உண்டாம் பயன்
முற்கூறியதனின் நூறுமடங்கு மிகும். பத்திலக்கம் மடங்கு பெரிதாகும்
என்பதாம்.

ஒலிமலர்த் தொடரி பெம்மான் ஒள்நிலாக் குழவி வேய்ந்த
அலர்முடிச் சடையிற் சாத்தல் நூற்றுநூ றதிக மாகும்
மலர்தொறும் உவகை பூத்து வானவர் வதிவார் அந்த
நலமிகு மலர்கொண் டேத்தல் நாதனுக் கினிதென் றோர்வீர்.  59

     பெருமானார்தம் இளம்பிறையை முடித்த சடையில் தழைத்த மலர்
மாலையைத் தொடுத்து அணிதல் முன்னைய புண்ணியத்தினும் பதினாயிரம்
மடங்கு மிகும். பல்வகை மலர்களிலும் தேவர் விரும்பி உறைவர். அத் தகு
நலமுடைய மலர்களைக் கொண்டு போற்றுதல் நாதனார்க்கு உவப்பாகும்
என்றறிதிர்.

மலர்களில் வாழும் கடவுளர்கள்

கன்னிகா ரத்தில் வாணி அலரியிற் கமலப் புத்தேள்
வன்னியில் வன்னி நந்தி நந்தியா வட்டப் பூவிற்
புன்னையில் வளிந மேருப் பூவினிற் கணங்கள் ஏடு
துன்னிய எருக்கின் அங்கித் தோன்றல்செண் பகத்துச்
                                     செவ்வேள்.  60

     கோங்க மலரில் சரசுவதியும், அலரி மலரில் பிரமனும், வன்னிப்
பூவில் அக்கினியும், நந்தியாவட்ட மலரில் திருநந்திதேவரும், புன்னை
மலரில் வாயுவும், ஓர்சாதிப் புன்னைமலரில் கணங்களும், இதழ்கள் செறிந்த
எருக்க மலரில் அக்கினியும் செண்பக மலரில் முருகப் பெருமானாரும்,

திருமகள் வில்லந் தன்னிற் சிறந்தகொக் கிறகின் மாயோன்
வருணன்வா ருணமென் போதில் வகுளத்திற் சுயசை மற்று
நிருதிமென் கிரீடப் பூவிற் சாதியில் நிகழ்ஈ சானன்
பரிதிசெங் கழுநீர்ப் பூவிற் குமுதத்திற் பனிவெண் டிங்கள்.   61

     வில்வத்தில் இலக்குமியும், கொக்கிறகு மந்தாரை மலரில் திருமாலும்,
வாருணம் என்னும் நீர்ப் பூவில் வருணனும், மகிழம்பூவில் நந்திதேவர்
திருமனைவியும், வாகை மலரில் நிருதியும், சிறுசண்பகத்தில் ஈசானமூர்த்தியும்,
செங்கழுநீர்ப் பூவில் சூரியனும், அல்லிமலரில் சந்திரனும்,

இந்திரன் மந்தா ரத்தின் இயக்கர்கோன் பொலம்பூ மத்தத்
தந்தகன் அபாமார்க் கத்தின் ஆரருள் கூர்ந்து வாழ்வார்
கந்தமென் கமலப் போதிற் கண்ணுதல் இறையே வைகும்
பைந்துகள் நீலப் பூவிற் பனிவரைப் பிராட்டி மேவும்.     62