சிவபுண்ணியப் படலம் 769


மழைமிடற் றிறைக்குச் சாத்தின் மழுவலான் உலகின் ஓரோர்
இழையினுக் கியம்புங் கற்பம் ஆயிரம் இனிது வாழ்வார்    70

     நுண்ணிய நூலான் அமைந்த துகிலும், வெள்ளிய நுரையை ஒக்கும்
மெல்லிய பட்டாடையும், பல தீவுகளினின்றும் வந்த விரும்பத் தக்க
ஆடைகளும் ஆகிய இவற்றைப் பேரன்புடனே மேகம் போலும்
கரியகண்டமுடையவர்க்குச் சாத்தினால் பரசுபாணியர் தம் சிவலோகத்தில்
ஓரோர் நூலிழைக்கும் சொல்லப்பெறும் ஆயிரம் கற்பம் இனிது வாழ்வர்.

நால்விரல் அளவை கொண்ட நல்லிழை தொண்ணூற் றாறிற்
சால்புற மும்மூன் றாக்கி மூன்றுறச் சமைத்த பூணூல்
சீலமோ டென்றுஞ் சாத்துந் திருமறை யவரைக் கண்டால்
மாலுடைப் புலையர் தாமும் மறுமையின் மறையோ ராவார்.   71

     நால்விரலை ஒன்றுபடுத்தித் தொண்ணூற்றாறு முறை சுற்றி அளவு
படுத்தி மூன்று புரியாக ஒவ்வொன்றில் மூன்றமைய முறுக்கிக் கொண்ட
பூணூலைத் தகைமையோ டென்றும் அணியும் மறையவரைத் தரிசித்தால்
குற்றமுடைய புலையரும் மறுமையில் அந்தணராவர்.

இம்மியி னளவு செம்பொன் எம்பிரான் முடியிற் சாத்தின்
அம்மஆங் கவர்பெ றும்பே றனந்தற்கும் அளத்தல் செல்லா
விம்மிய செல்வர் கோடி வீசலும் வறியோர் தன்னம்
உண்மையின் அளித்தற் கொவ்வா உறுதிஅன் புடைமை பெற்றால். 72

     மத்தங்காய் அளவு செம்பொன்னை மணிமுடியிற் சாத்தினாலும்
அவரடையும் திருவருட் செல்வத்தை ஆயிரம் நாவுடைய ஆதிசேடனாலும்
சொல்ல இயலா ஆகும். பெருஞ்செல்வர் கோடி அளவாகச் செம்பொன்
வழங்கினாலும் வறியவர் சிறிதே ஆரவாரமின்றி உண்மை அன்பொடும்
வழங்குவராயின் அதற்கு அச்செல்வர் பொருள் ஒப்பாகாது தாழும்.

வெறிமலர் இண்டை மாலை விரைகமழ் தூப தீபம்
அறுசுவை அடிசில் ஆன்ற வெள்ளிலை பழுக்காய் மற்றும்
உறுகுடை கவரி யாதி பூசனைக் குரிய வெல்லாம்
முறுகுபே ரன்பின் எந்தைக் காக்குவோர் முத்த ராவார்    73

     மணங்கமழும் முடிமாலையும், மணங்கமழும் தூபமும் தீபமும்
அறுவகைச் சுவையுடைய போனகமும், தாம்பூலமும், மேலும் சிறந்த குடையும்,
கவரியும் பூசனைக்கு வேண்டும் பிறவும் முதிர்ந்த பேரன்பொடும் எமது
பெருமானார்க்கு உரிமை ஆக்குவோர் சீவன் முத்தராவார்.