| ஒலியையுடைய கடலை அறிவுறுத்தவும், அக்கடலிடை எழும் செறிந்த    நுரையை ஒத்து விளக்கமுடைய குடைகள் நெருங்கவும்,
 		| அன்ன மாக்கடல் தோன்றிய ஆரமிழ் தென்ன மாதர் மிடற்றிசைப் பாடலும்
 நன்னர் மங்கல நாதமும் வேதமும்
 மன்னும் அன்பர்கள் பாட்டும் மலிந்தெழ.         78
 |       அக்கடலிடைப் பிறந்த அரிய அமிழ்தத்தை ஒப்ப மகளிர் கண்டப்    பாடலொலியும், சுபச்சோபன ஒலியும், வேத ஒலியும் மெய்யன்பர் தோத்திர
 ஒலியும் மல்கி எழவும்,
 		| இமய மாதிய ஈகையங் குன்றெலாந் தமதி ருங்குடித் தையல்நல் லாளொடும்
 விமலர் கொள்ளும் விழாவணி காணவந்
 தமைவு கொண்டெனத் தேர்கள் அலங்குற.       	79
 |       இமயம் முதலிய பொன்மலைகள் யாவும் தம்குடியிற் றோன்றிய     மலைமகளாருடன் பெருமானார் கொள்ளும் திருவிழாவைச் சேவிக்க வந்து
 சேர்ந்தாலெனத் தேர்கள் விளங்கவும்,
 		| பொன்னங் கிண்கிணி பூஞ்சிலம் பின்னொலி மின்னு மேகலை ஆர்ப்பொலி மிக்குற
 அன்ன மன்ன அணங்கனை யார்குழாந்
 துன்னி எங்கணும் ஆடல் தொடங்கிட.           80
 |       பொன்னாலமைந்த கிண்கிணி, சிலம்பு, மேகலை இவற்றின் ஆரவார     ஒலி மிக்கெழ அன்னம்போலும் நடையினையும் தேவ மகளிர் போலும்
 வடிவினையும் உடைய மங்கையராயம் நெருங்கி யாண்டும் ஆடல்
 தொடங்கவும்,
 		| சிகர மாளிகைத் தெற்றி தொறும்பயில் மகர தோரணப் பன்னிற மாமணி
 துகளில் பேரொளி துன்றிய வீதியும்
 புகரில் சித்திரந் தீட்டிய போலுற.                81
 |       சிகரங்களையும் மேடைகளையும் உடைய வீடுகள் தோறும் தூக்கிய     மகர மச்ச வடிவில் அமைந்து பல நிறங்களையுடைய மணிகள் பதித்த
 தோரணங்களின் குற்றமற்ற பேரொளி செறிந்த வீதிகளும் குற்றமற்ற
 சித்திரங்கள் தீட்டப்பெற்றுள்ளனபோலக் காட்சி அளிப்பவும்,
 |