பூக மும்பசும் பொற்குலை வாழையும் மாக முந்திட நாட்டி வயக்கிய போகு பந்தரும் பூரண கும்பமும் ஏகும் அவ்விடந் தோறும் இலகிட. 82 | பாக்கு மரங்களும், குலையுடைய வாழைகளும் விசும்பு பிற்படத் தூக்கி விளங்க வகுத்த மிக்குயர்ந்த பந்தர்களும் நிறைகுடங்களும் செல்லுமிடமெல்லாம் விளங்கவும், வளிஉ லாமதர் மாளிகை சூளிகை குளிர்கொள் மண்டபங் கோபுர மீதெலாம் நளிம லைத்தலை நன்கொடி பூத்தெனக் களிம டக்கொடி யார்கஞ லித்தொழ. 83 | காற்று வழங்கும் சாலேகங்களையுடைய மாடங்களும் மேல் தெற்றிகளுடைய குளிர்ச்சி வாய்ந்த மண்டபங்களும், கோபுரங்களும் ஆகிய இவற்றின்மேல் பெருமை பொருந்திய மலைமிசை நல்ல கொடிகள் பூத்து விளங்கினாற்போல உறுப்பெல்லாம் மலர்களை ஒக்கும் கொடிபோல்வார் செறிந்து தொழவும், குங்கு மக்குழம் புங்குளிர் சாந்தமும் பொங்கு வாசப் புதுப்பனி நீரொடு வெங்கண் மங்கையர் பந்தினில் வீசுவ எங்கும் மல்கி அடிகள் இழுக்குற. 84 | குங்குமக் குழம்பும், குளிர்ந்த சந்தனச் சேறும் மிக்குக் கமழும் பனிநீரொடும், கொடிய பார்வையையுடைய மகளிர் நீர்வீசுந் துருத்தியால் வீசுதலின் தெருவிடங்கள் எவ்விடத்தும் செல்வோர் அடிகள் வழுக்குறவும், முடிகள் தம்மின் அராவி முழுமணி படியில் உக்கன பாறினங் கொண்மின்என் றுடைய மாந்தர்க் கறிவுறுத் தாங்கவர் அடிகள் பைதுறுத் தங்கங் கவிர்தர. 85 | முடியொடு முடிதாக்கிப் பதித்திருக்கும் நிறைமணிகள் வீழ்ந்து கிடந்தனவாய் யாம் சிதறினம் கொள்ளுங்கோள் என்று மணிக்குரியவர் தமக்கு உணர்த்துவனபோல அவர் அடிகளில் உறுத்தி ஆங்காங்கு ஒளிவிடவும், இளிந்த பூகத் திருங்கனி வெள்ளிலை ஒளிர்ந்த பொன்மணி ஒண்பொரி பன்மலர் | |