அளிந்த பல்பழ மாதி இறைப்பன குளிர்ந்து வீதி குழீ இத்திடர் செய்திட. 86 | பாக்கு மரத்திற் பழுத்த பழுக்காயும், வெற்றிலையும், ஒளிவிடும் பொன்னும், மணியும், வெண்பொரியும், பல்வகை மலர்களும், கனிந்த பழங்களும் ஆக வீசப்படுபவை வீதியிற் கிடந்து திரண்டு மேடுபடவும், கவள யானைக் கடாம்மழைத் தாரையும் இவுளி வாயின் இழிந்த விலாழியும் உவரி யாகிஉயர்ந்த அத் திட்டையைத் திவள மோதிப் படர்ந்தன செல்லவே. 87 | கவளங் கொள்ளும் களிறுகளின் மதநீர்ப் பெருக்கும் குதிரைகளின் வாயினின்றும் ஒழுகுகின்ற நுரைநீரும் கூடிக் கடல்போலாகி முற்கூறிய மேடுகளை இடம் பெயரத் தாக்கிப் பரவினவாய்ச் செல்லவும், அறுசீரடி யாசிரிய விருத்தம் கல்வரைப் பிராட்டி செவ்வேள் ஐங்கரன் கணங்கள் சூழப் பல்வகை ஊர்தி உம்பர்ப் படரொளி அரச வீதி எல்லையில் உயிர்கட் கெல்லாம் எண்ணருங் கருணை பூத்துப் புல்கொளித் திருவே கம்பன் திருஉலாப் போதச் செய்வோர். 88 | மலைமகளும் முருகப் பெருமானும், விநாயகரும் சிவகணங்களும் சூழ்ந்துவரவும் தத்தமக்கு உரிய வாகனங்களில் ஒளி உலவும் அரசவீதிகளில் அளவில்லாத ஆன்மாக்களுக்கும் அளவிடலரிய திறத்தன ஆகும் அருளைப் புரிந்து எழுந்தருளும்படி திருவேகம்பரை உலாப் போதுமாறு விழா நடாத்துவோர். மேதகு தவந்தா னங்கள் வேள்விகள் அனைத்துஞ் செய்தோர்க் கோதிய பயத்திற் கோடி யுடையராய்க் கோடி கோடி ஏதமில் குலத்தி னோடும் எம்பிரா னுலகின் வாழ்ந்து சாதலும் பிறப்பும் இல்லாத் தத்துவந் தலைப்பட் டுய்வார். 89 | மேன்மை பொருந்திய தவத்தையும், தானத்தையும், யாகங்களையும் புரிந்தவர்க்குச் சொல்லப்பட்ட பயனைக் காட்டினும் கோடிமடங்கு பயனை எய்துவர், குற்றமற்ற பல கோடியராய் மரபின் வந்தவரோடும் சிவலோகத்தில் வாழ்ந்து இறத்தலும் பிறத்தலும் நீங்கிய மெய்யுணர்வைப் பெற்றுய்வார். இத்தகு கடவுட் சாறு நோக்கிஅங் கிறைஞ்சு வோரும் அத்தகு விழவின் ஈற்றில் தீர்த்தநீர் ஆடு வோரும் | |