| 		| பைத்தபாம் பல்குற் செவ்வாய்ப் பனிமொழி ஒருபால் மேய வித்தகன் கயிலை நண்ணி விறற்கண நாத ராவார்.      90
 |       காஞ்சியம்பதியில் திருவேகம்பர் திருவிழாவைக் கண்டு சேவிப்பவரும்     உமையம்மையை ஒருபுடை தழுவிய சதுரர்தம் கயிலையை நண்ணி வெற்றி
 வாய்ந்த கணநாதராவார்.
 		| ஏழுயர்ந் தேழு மண்தோய்ந் திலக்கணம் நிரம்பும் வேழங் காழ்மணி யணிகள் பூட்டிக் கவின்பெற விருத்தி யோடுங்
 கோழரைத் தனிமா நீழற் குழகனுக் குதவப் பெற்றோர்
 பாழ்வினைச் சிமிழ்ப்பின் தீர்ந்து திருவருள் பற்று வாரால்.  	91
 |       ஏழுமுழம் அளவாக உயர்ந்து ஏழுறுப்புக்கள் மண்தோய்ந்து பிற     இலக்கணங்களும் நிரம்பப்பெற்ற உத்தம யானைக்கு மணிமாலைகளைப்
 பூட்டி அழகுண்டாக நாளும் வேண்டும் பாதுகாப்புப் பொருள்களுடன்
 கொழுவிய அடியினையுடைய ஒப்பற்ற மாநீழலில் வீற்றிருக்கும் குழகனார்க்கு
 அதனைக் கொடுத்த பேற்றினையுடையோர் வறிதே செயற்படுத்தும்
 வினைவிலங்கினின்றும் நீங்கித் திருவருளைத் தலைப்படுவர்.
 		| நலமிகும் பரிமா ஆக்கள் நாடகக் கணிகை நல்லார் நிலம்நகர் நாடு மற்றும் நெடுமறை மாவின் மூலத்
 தலைவனுக் கினிது நல்குந் தவத்தினோர் கயிலை நண்ணி
 அலகில்பல் லூழி வாழ்ந்தங் கரும்பெறல் வீடு சேர்வார்.   92
 |       பெருமை பொருந்திய வேதமாவின்கீ ழெழுந்தருளியுள்ள பெருமானுக்கு     உத்தமக் குதிரைகள், பசுக்கள், ஆளாகும் கணிகையர், விளைநிலங்கள்,
 சிற்றூர், பேரூர் எனப்பெறும் இப்பொருள்களை நல்கும் தவமுடையார்
 கயிலையை அடைந்து நெடுங்காலம் வாழ்ந்து பெறலரிய வீட்டினைப் பெறுவர்.
          மாயிரு மறைகள் மற்றும் புத்தகத் தெழுதிக் கம்பக், கோயிலின்     அமைப்போர் வெள்ளிக் குன்றிடை எழுத்தொவ்வொன்றற், காயிரங்
 கற்பம் வாழ்வார் சிவாகமம் அமைக்கும் பேறு, மேயினோர் எய்தும்
 பேற்றை யாவரே விளம்ப வல்லார்.                         93
      அரிய பெரிய வேதங்களை ஏட்டினில் எழுதித் கோத்துத் திருவே     கம்பர் திருக்கோயிலில் சேர்ப்போர் கயிலையில் எழுத் தொன்றுக்கு ஆயிரம்
 கற்பம் அளவில் வாழ்வார். சிவாகமத்தை எழுதித் தருவோர் பெறும்பயனை
 யாவரே முற்றவும் கூறவல்லவர் ஆவர்? ஒருவரும் இலர்.
 		| வண்டுளர் தனிமா நீழல் வள்ளலுக் கன்பு கூர்ந்து பண்டுளோர் ஆக்கும் இன்ன அறங்களைப் பாது காப்போர்
 |  |