780காஞ்சிப் புராணம்


     கருமநிகழ் பாரதமாம் வருடமிசைக் காலப்பே ரிறைமை
நும்பால், இருவினேம் ஆண்டளவை ஒன்றொழிந்த பதினொருநான்
கிலக்க மேலால், இருபதினா யிரமுறுக இங்கிவற்றை நால்வர்க்கும்
ஏயு மாற்றால், வருமுறையிற் கூறுபடுத் துதவுதும்என் றருள் செய்து
வகுக்க லுற்றான்.                                         114

     கரும பூமியாகிய பாரத வருடத்தின் காலப் பெயர்பெற்ற தலைமைப்
பாட்டினை நும்மிடத்து வைத்தோம். அக்கால அளவை நாற்பத்து மூன்று
லட்சத்து இருபதினாயிரம் வருடமாகுக. இவற்றை நீவிர் நால்வீர்க்கும்
பொருந்து முறையால் கூறுசெய்து உதவுவோம் என்றருளி வகுக்க லுற்றனர்.

     அருள்பயக்கும் வீடுதவுங் கான்முளையாங் கிருதயுக மூத்தோய்
ஆதி, தெருள்பயக்கும் அறம்பயக்குந் திரேதாநீ இளையோய்காண்
செப்புங், காலைப், பொருள்பயக்குந் துவாபரநீ இவர்க்கிளையாய்
பொலிவுபெறு காமம் ஈன்ற, மருள்பயக்குங் கலியுகநீ மூவருக்கும்
இளையோயாய் வயங்கு வாயால்.                            115

     அருளை வழங்கும் வீட்டினைக் கொடுக்கும் சற்புத்திரனாம் கிருதயுகமே!
நீ மூத்தோன் ஆவாய். தெளிவுணர்வை நல்கும் அறத்தைங் கொடுக்கும்
திரேதாயுகமே! நீ முன்னவனுக்கு இளைய சகோதரனாவாய். சொல்லுமிடத்துத்
பொருளைக் கொடுக்கும் துவாபரயுகமே நீ திரேதாவிற்கு இளையை ஆவாய்,
விளக்கம் மிகும் காமம் பயக்கும் மயக்கத்தைப் பயக்கும் கலியுகமே! நீ
மூவர்க்கும் இளையோய் ஆகி விளங்குவாய் ஆதி.

     வேதியனே கிருதயுகம் வேல்வேந்தன் திரேதாமெய்
வணிகன்றானே, ஓதுதுவா பரம்ஏனோன் கலியாகும் இம்முறையான்
உமக்கு வைத்த, ஏதமில்இந் நாற்பத்து மூன்றிலக்கத் திருபதினா
யிரமாம் ஆண்டும், பேதமுறும் ஈரைந்து கூறாகப் பகுத்தந்தப் பிரிவின்
மன்னோ.                                              116

     கிருதயுகம் முதலாம் நீவிர் நால்வீரும் பிராமணம் முதலாம் நால்வகை
வருணத்திற்கும் உரிமை உடையீராவீர் ஆகுக. நாற்பத்து மூன்று இலக்கத்து
இருபதினாயிரம் வருடமும் பத்துக்கூறாய்ப் பகுப்பப் பெற்று அப்பகுப்பில்,

கிருதமோர் நாற்கூறு முக்கூறு திரேதாவுங் கிளந்து கூறும்
இருகூறு துவாபரமும் ஒருகூறு கலியுகமும் எய்து வீரால்
பெருவாய்மை மறையாக நாற்குலத்து மனைவியர்பாற்
                                       பெறுஞ்சேய்கட்கு
வருகூறும் இவ்வாறே நான்குமூன் றிரண்டொன்று வழக்கமாமால்