782காஞ்சிப் புராணம்


     நந்திபிரான் அருள்பெற்றுச் சனற்குமரன் நவின்றபடி வியாத
மேலோன், இந்துவாழ் சடைப்பெருமான் திருவடிகாண்பதற்கேது
இதுவே யென்ன, அந்திலெனக் குரைசெய்த அரும்பொருள்இங்
குமக்குரைத்தேன் அறிவின் ஆன்ற, சிந்தையீர் தெளிமின்எனச்
சூதமுனி முனிவரர்க்குத் தெருட்டினானால்.                   121

     திருநந்திதேவர் திருவருளைப் பெற்றுச் சனற்குமார முனிவரர் கூறியபடி
வியாசர் சிவபெருமான் திருவடியைப் பெறுதற்கு ஏது இவ்வுபாயமே என்று
அடியேனுக் கருள அப்பொருளை உங்களுக்குரைத்தேன் என்று சூதமுனிவரர்
மற்றைய முனிவரர்க்குத் தெரிவித்தனர்.

சிவபுண்ணியப் படலம் முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் 2742.

ஸ்ரீ சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த காஞ்சிப்புராணம்
முற்றிற்று.

ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி.

சிவஞான மாதவன் சேவடி வாழ்க.