| 		றதும்; ஈசானமூர்த்தி வணங்கி வடகீழ்த்திசைக்கு இறைவன் ஆயதும்; திருமால் மச்சமாய்ப் போற்றிச் சோமுகன் என்னும் அசுரனை அழித்து வேதத்தைக்
 கொணர்ந்து வேதியர்க்களித்ததும்;
      மீயுயர் குறளோன் அவுணனைச் சிறையிற் புகுத்துமீண்டிறைஞ்சிய    வாறும், மாயவன் பரவிக் கடல்விடந் தாக்கும் வெப்பு நோய் மாறநின்
 றதுவும், நாயகி உருவிற் கவுசிகை தோன்றி நாதனைப் பூசித்த வாறும்,
 தூயமா காளப் பாப்பர சிறைஞ்சித் தொல்லைவீ டுறப்பெறு மாறும். 	23
      வாமனன் மாவலியைச் சிறையிட்டுப் பின்னரும் போற்றியதும்; கரியோன்     பரவி விடவேகத்தான் வந்த வெப்பு நோய் நீங்கியதும்; அம்மையார் கழித்த
 வடிவிற் கவுசிகை தோன்றி நாதனைப் பூசித்ததும்; மாகாளன் என்னும் பெரும்
 பாம்பு வழிபட்டு முத்தி யெய்தியதும்;
      அண்ணலார் ஆணை மறுத்தவெந் தீமை அறுத்திடக் குமரகோட்     டத்தில், நண்ணிவீற் றிருந்து சேயிலை நெடுவேல் நாயகன் பூசித்த
 வாறும், மண்ணெலாம் பரவும் மார்க்கண்ட முனிபால் வஞ்சகங்
 கருதிய மாயோன், கண்ணுதற் பிரானை அத்தலத் திறைஞ்சி
 அவ்வினை கழுவிய வாறும்.                             24
      சிவபெருமான் கட்டளையை மேற்கொள்ளாத குறை தீரத்     திருக்குமரகோட்டத்தில் முருகப்பெருமான் சேனாதிபதீசப் பெருமானைப்
 பூசித்ததும்; மக்கள் யாவரும் போற்றும் மார்க்கண்டேயரிடத்து வஞ்சங்
 கருதிய திருமால் அத்தலத்தே வணங்கி பாவத்தைக் கழுவாய் செய்ததும்;
      சாத்தனார் போற்றி உரிமைபெற் றதுவும் மங்களைத் தையல்போற்றியதும், தீத்தொழில் அரக்கர்ச் செகுத்துவந் திராமன் பணிந்ததும்
 தேவர்கோன் வலவன், ஏத்திய வாறும் நாரணன் பரவிப் பாப்புரு
 இரித்ததும் மயானக், கூத்தனார் முழுதுந் தழலிடை ஒடுக்கிப்
 பண்டனைக் கொலைசெய்த வாறும்.                       25
      சாத்தனார் போற்றிக் கணத் தலைமையைப் பெற்றதும்; மங்களை     எனும் அம்மை பூசித்தலும்; கொடுந்தொழிலையுடைய இராவணாதியரைக்
 கொன்றுவந்து இராமன் மீளப் பூசித்ததும்; இந்திரன் தேர்ச்சாரதியாகிய
 மாதலி பூசித்ததும்; நாரணன் வணங்கிப் பாம்பு வடிவம் நீங்கியதும்;
 அனைத்துயிர்களின் உடம்பையும் வேள்வியிலிட்டுப் பெருமான் அவ்வழியாகப்
 பண்டாசுரனைக் கச்சி மயானத்தில் அழித்ததும்;
      ஓவிய உலகைத் தோற்றுவான் எங்கோன் ஒற்றைமா மூலத்தின்    முளைத்துத், தாவறு சிறப்பின் இலளிதைப் பிராட்டி தனைப்பயந்
 தாங்கவள் விழியின், மூவரைப் படைத்துச் செய்தொழில் வகுத்துச்
 செவியறி வுறுத்துமொய் கூந்தல், தேவியுங் கடவுள் மூவரும் பரவச்
 சிறப்பொடு வீற்றிருந் ததுவும்.                           26
 |