|  
       217.	ஆதலால் வெகுளியே பகை நமக்கெலாம் 
             தீதெலாம் வினையினாற் றீக்க திப்பெயும் 
             காதலார் தம்மையு மொருக ணத்துளே 
             ஏதிலா ராக்குமிஃ  திகழத் தக்கதே.	 
           (இ-ள்.)  ஆதலால் -  ஆகையினால், வெகுளியே - கோபமே, 
        நமக்கு     -   ஆத்மாக்களாகிய    நமக்கு,    பகை   எல்லாம் - 
        சத்துருவெல்லாமாகும்,     தீதெல்லாம்    -   தீங்குகளெல்லாமாகும், 
        வினையினால்    -     (தன்னுடைய)    கருமங்களினால், தீக்கதி - 
        கெட்டகதிகளிலே,   பெய்யும்   -  (நம்மை) அடைவிக்கும், காதலார் 
        தம்மையும்   -    உறவினர்களையுங்கூட,   ஒரு கணத்துளே - ஒரு 
        க்ஷணத்திற்குள்ளே,   ஏதிலராக்கும் - பகைவர்களாகவும் செய்விக்கும், 
        (ஆதலின்),    இஃது -   இக்கோபமானது, இகழத்தக்கது - இகழ்ச்சி 
        செய்யத்தக்கது, எ-று.								                                   (77)		 
      வேறு.	 
      218.	மற்றிவன் செய்த தீமைக் கேதுமா முனிவ னேமுன் 
            கொற்றவ னாகிச் செய்த கொடுமைசெய் கோபத் தீயால் 
            வெற்றிவே லுண்ட நீர்போ னின்றவே ரத்தின் வீடி 
            யிற்றவிப் பிறப்பின் வேரத் திவனிவை செய்த தென்றான்.	 
           (இ-ள்.)  மற்று  -  பின்னையும்,  இவன் - இவனால், செய்த - 
        செய்யப்பட்ட,    தீமைக்கு    -   பொல்லாங்கிற்கு, ஏது - காரணம், 
        மாமுனிவனே   -   இச்சஞ்சயந்த     மஹாமுனியே,  (இவன்) முன்- 
        பூர்வத்தில்,   கொற்றவனாகி - ஸிம்மஸேனனென்னும் அரசனாயிருந்து, 
        செய்த  - செய்ததாகிய, கொடுமை செய் - துன்பஞ் செய்யும்படியான, 
        கோபத்தீயால் - கோபாக்கினியினால், வெற்றி - வெற்றியைத்தருகின்ற, 
        வேலுண்ட  -   காய்ச்சிய வேலாயுதமானது உட்கொண்ட, நீர்போல் - 
        ஜலத்தைப்போல,    நின்ற    -     தங்கியிராநின்ற,   வேரத்தின் - 
        வைரபாவத்தோடு,    வீடி  -  இறந்து (தீக்கதிகளில் செல்பவனாகிய), 
        இவன்   -  இவ்வித்துத்தந்தன்,   இற்றவிப் பிறப்பின் - (ஸிம்மஸேன 
        வரசனுக்கு)   அந்தியபவமாகிய   சஞ்சயந்தராம் இப்பிறப்பினிடத்தே, 
        வேரத்து   -    அவ்வைரத்தால்,   இவைசெய்தது - இப்படிப்பட்ட 
        உபசருக்கங்களைச்    செய்ததுண்டாகியது,    என்றான்  -  என்று 
        ஆதித்யாபதேவன் சொல்லினான், 
          எ-று.											                   (78)	 
      219.	இதற்குமுன் போன நான்கு பிறப்பிலிவ் வீரன் செய்கை 
            மதித்தவன் பிறவி தோறும் வயிரத்தால் வானத் துய்த்தான் 
            அதற்கெலாஞ் செய்வ தென்கொ லருந்தவன் றிரிந்து வாராக் 
            கதிக்கணின் றானி வன்றன் றீமையாற் கண்ட துண்டோ.  |