|    226. சீயமா புரத்தின் றன்மை செப்புவன் சிறிது 
        கேண்மோ 
             காயமா றாகச் செல்வோர் கண்டபின் கடந்து போகார் 
             தூயவாந் தலஞ்செய் குன்றஞ் சோலைகண் மாடந் தம்மாற் 
             சேயிழை மடநல் லார்போல் சித்தத்துக் கினிய 
        தொன்றே.  
           (இ-ள்.) சீயமாபுரத்தின் 
        - அந்த ஸிம்மமஹா புரத்தினது, தன்மை 
        - தன்மையை,  சிறிது  -  கொஞ்சம்,  செப்புவன்  -  
        சொல்லுவேன், 
        கேண்மோ  -  கேட்பாயாக,   காயமாறாக   -   
        ஆகாயமார்க்கமாக, 
        செல்வோர்   -   செல்பவர்களாகிய    தேவர்கள்   வித்தியாதரர்கள் 
        முதலியவர்கள், கண்டபின் - அந்நகரத்தைப் பார்த்த பின்பு, கடந்து - 
        தாண்டி,   போகார்  -  போகமாட்டாமல்  தங்குவார்கள், 
        தூயவாம் - 
        பரிசுத்தமாகிய,     தலம்     -    தலங்களும்,      
        செய்குன்றம் - 
        கிரீடாத்திரிபர்வதங்களும்,   சோலைகள்   -  தோப்புகளும்,   
        மாடம் 
        தம்மால்  -  உப்பரிகைகளும் (ஆகிய) இவைகளால், (பார்க்குமிடத்தில் 
        அது) சேயிழை - சிவந்த ஒளியுள்ள ஆபரணங்களை யணிந்திராநின்ற, 
        மடம்        -       அறியாமையையுடைய,       நல்லார்போல் 
        - 
        ஸ்திரீமார்களைப்போல,  சித்தத்துக்கு  -  மனதுக்கு, இனியதொன்று 
        - 
        இனிமையான தோற்றத்தையுடையதாகிய ஒன்றாகும், எ-று.         (3) 
       
       227. செப்பிய நகர்க்கு நாதன் சீயமா சேன னென்பான் 
             வெப்பநின் றறாத வேலான் வேந்தரை வென்ற பெற்றிக் 
             கொப்புமை யின்றி நின்றா னுதவிகற் பகத்தை யொப்பான் 
             துப்புறழ் தொண்டை வாயார் தொழுதெழு காமன் கண்டாய்.  
           (இ-ள்.)  செப்பிய 
        -  சொல்லப்பட்ட,  நகர்க்கு - அந்த  ஸிம்ம 
        மஹாபுரத்திற்கு,  நாதன் - இராஜாவானவன், சீயமாசேன னென்பான் - 
        சிம்மசேனனென்பவனாகும்,   வெப்பம்நின்று   -  சத்துருக்கள்பேரில் 
        ஏற்படும் கோபவெதுப்பம்நின்று,   அறாத   -   
        நீங்காத, வேலான் - 
        வேலாயுதத்தையுடைய     அவ்வரசன்,    வேந்தரை 
          -    சத்துரு 
        இராஜாக்களை,      வென்ற     - 
            ஜெயித்த,      பெற்றிக்கு 
        - 
        பெருமைத்தன்மைக்கு, ஒப்புமையின்றி - உவமையில்லாமல், நின்றான் - 
        நிலைபெற்றிருந்தான்,      உதவி     -     
        உதவி      செய்வதில், 
        கற்பகத்தையொப்பான் - கற்பகவிருட்சத்துக்குச் சமானமானவன், துப்பு 
        - பவளத்தை,  உறழ் - ஒத்த, தொண்டை - கொவ்வைக் கனிபோன்ற, 
        வாயார்   -   சிவந்த   வாயையுடைய  ஸ்திரீமார்கள், 
        தொழுதெழு - 
        வணங்கிச்   செல்லும்படியான,  காமன் - மன்மதனாகும், கண்டாய் - 
        தெரிந்தனையா?, எ-று.                                     
        (4)  
       228. ஊனுமிழ்ந் திலங்கும் வைவேல் மன்னவ னுள்ளத் துள்ளாள் 
             தேனுமிழ்ந் திலங்கு மைம்பாற் றேவிதா னிராம தத்தை 
             வானுமிழ்ந் திலங்கு மின்போல் வருந்துநுண் ணிடையாள் வாரி 
             தானுமிழ்ந் தமிழ்து பெய்த கலசம்போற் றனத்தினாளே. 
        |