|        (இ-ள்.) 
         ஊன் - மாமிசத்தை, உமிழ்ந்து  -  கக்கி, இலங்கும் - 
        விளங்கும்,   வை  -  கூர்மையான, வேல்  -  வேலாயுதத்தையுடைய, 
        மன்னவன்  -  அவ்வரசனது, உள்ளத்து   -   
        மனதில்,  உள்ளாள் - 
        தங்கியிராநின்றவளாகிய, தேன்  -  தன்னிடம்  அணியப்பட்டிருக்கும் 
        மலரிலுள்ள  மதுவை,  உமிழ்ந்து  - சொரிந்து, இலங்கும் - விளங்கும், 
        ஐம்பால்  -  ஐந்து  பகுப்பையுடைய கூந்தலைப்பெற்ற,  தேவிதான் 
        - 
        பட்டத்தரசியானவள்,   இராமதத்தை   -   இராமதத்தை   
        யென்னும் 
        பெயரினையுடையாள்,    (அவள்)    வான்   -    
        ஆகாயத்திலுள்ள 
        மேகத்தால்,    உமிழ்ந்து    -  வெளிப்படுத்தப்பட்டு, 
           இலங்கும் - 
        விளங்கும்,    மின்போல்   -   மின்னற்  
        கொடிபோல,  வருந்தும் - 
        (தளர்ச்சியால்)   வருந்தாநின்ற,  நுண்  -   
        மெல்லிய,  இடையாள் - 
        இடையினையுடையாள்,  வாரிதான் - க்ஷீரஸமுத்திரத்தால்,  உமிழ்ந்த 
        - 
        தரப்பட்ட,  அமிழ்து - அமிர்தத்தை,   பெய்த  -  உள்வைக்கப்பட்ட, 
        கலசம்போல்   -  சிறு  கும்பந்துக்குச்  சமானமான,   தனத்தினாள் 
        - 
        கொங்கைகளையுடையாள், எ-று. 
           வான்   இடவாகுபெயராய் 
          மேகத்தை   யுணர்த்திற்று.  தான் 
        இரண்டும் அசைகள். உமிழ்ந்தமிழ்து என்பதில் அகரந்தொக்கது.   (5)  
       229. வேதநான் கங்க மாறும் புராணமும் விரிக்குஞ் சொல்லிற் 
             றீதிலாச் சத்திய கோட னாமஞ்சீ பூதி யென்பான் 
             போதுலா முடியி னானுக் கமைச்சனாய்ப் புணர்ந்து பின்னைத் 
             தீதெலா மகற்றி வையஞ் செவ்வியாற் காக்கு நாளால். 
       
           (இ-ள்.)  வேதம்நான்கு 
        - சதுர்வேதங்களையும்,  அங்கமாறும் - 
        ஆறுவிதமான   சாஸ்திரத்தினது   அங்கங்களையும்,    புராணமும் 
        - 
        பதினெண்புராணங்களையும்     உபபுராணங்களையும்,    விரிக்கும் 
        - 
        விரித்துரைக்கின்றவனும்,  சொல்லில்   -   வசனத்தினால், 
         தீதிலா - 
        குற்றமில்லாதவனுமாகிய,      சத்தியகோடன்     -    
        ஸத்தியத்தை 
        கோஷிக்கின்றவனென்னும்,   நாமம்  -  அன்வர்த்த நாமத்தையுடைய,  
        சீபூதியென்பான்  -  ஸ்ரீபூதி என்கிற பிராமணன்,  போது புஷ்பமாலை, 
        உலாம்   -   அணியப்பெற்றுப்   புரளுகின்ற,     
        முடியினானுக்கு - 
        முடியையுடைய  அவ்வரசனுக்கு,   அமைச்சனாய்   -   
        மந்திரியாகி, 
        புணர்ந்து - சேர, பின்னை - பிற்பாடு, வையம் - தனது இராஜ்யத்தில், 
        தீதெலாம்   -   பொல்லாங்குகளை   யெல்லாம், 
          அகற்றி - நீக்கி, 
        செவ்வியால் - நடு   நிலைமையால்,   காக்கு   நாள் 
        - (அவ்வரசன்) 
        இராஜ்யம் பண்ணுகின்ற காலத்தில், எ-று.  
           புணர    என்னும் 
           செயவெனெச்சம்,    புணர்ந்து    
        எனச் 
        செய்தெனெச்சமாய்த் திரிந்து வந்தது. ஆல் - உருபுமயக்கம்.      (6) 
       
      வேறு.  
       230. பத்ம சங்க நிதிக்கிட மாயது 
             பத்ம சண்ட மெனப்பகர் மாநகர்   |