|   னைப்போல, வளர்ந்து - விருத்தியடைந்து, அந்தமில் 
        - அளவில்லாத, 
        உவகைக்கு  -  சந்தோஷத்திற்கு,  இடமாயினான் -  ஸ்தானமானான், 
        எ-று. 
           நாளினால்    என்பதில் 
          இன்,  ஆ  -  சாரியைகள்;  இன் - 
        சாரியையாய், ஆல் - உருபுமயக்கமாக வந்ததெனினுமாம்.         
        (9)  
       233. சுரந்த கார்முகில் போல சுதத்தனென் 
             றிரந்த வர்க்கிடர் தீர வளித்தவன் 
             பரந்து லாம்பெயர் பத்திர மித்திரனெம் 
             மரந்தை தீர்த்தலி னாமென வோதினான்.  
           (இ-ள்.) சுரந்த  -  
        நீர்நிறைந்த,  கார்  -  கரிய, முகில்போல - 
        மேகத்தைப்போல, (அதாவது அம்மேகம் மழையைப் பொழிவதுபோல்), 
        சுதத்தனென்று   -   நல்ல   ஈகையையுடையவனென்று 
          உலகத்தார் 
        சொல்லும்படி,  இரந்தவர்க்கு  -  யாசித்தவர்களுக்கு, இடர் - வறுமை, 
        தீர - நீங்க, அளித்து  -  திரவியத்தைக்கொடுத்து,  அவன் 
        -  அந்த 
        ஸ்ரீஷ்டியானவன்,   எம் - எங்களுடைய,  அரந்தை -  வருத்தத்தை, 
        தீர்த்தலின்  -  இக்குமாரன்   நீக்கினபடியால்,  (இவனுக்கு)  
        பரந்து - 
        எவ்விடங்களினும்  சென்று,  உலாம்  -  வியாபிக்கும் (புகழையுடைய), 
        பெயர்     -     நாமமானது,      பத்திரமித்திரன் 
            ஆமென - 
        பத்திரமித்திரனாகுமென்று, ஓதினான் - (அப்புத்திரனுக்குப் பெயரிட்டுச்) 
        சொன்னான், எ-று.  
           எனவென்னும் எச்சம் என்று எனத்திரிந்து 
        வந்தது.         (10)  
       234. கலையி னின்பமுங் காமரு கன்னியர் 
             மலைவி னின்பமு முத்தொடு மாமணி 
             விலையி னின்பமும் வேண்டினர்க் கீந்தெய்துந் 
             தலையி னின்பமுந் தானவ னெய்தினான்.  
           (இ-ள்.) (அதன்மேல்) கலையின் 
        இன்பமும் - சாஸ்திரங்களைத் 
        தெரிந்து அதனாலாகிய இன்பத்தையும், காமரு - அழகிய, கன்னியர் - 
        மாதர்களினது, மலைவினின்பமும் - இல்லற வியலாலுண்டாகிய சுகமும், 
        முத்தொடு   -   முத்துக்களோடு,  மா   -   
        பெரியதாகிய, மணி -  இரத்தினங்களுடைய, விலையினின்பமும்   -  
        விலைமதித்தலாலாகிய 
        இரத்தின வியாபாரத்தின் சுகமும், வேண்டினர்க்கு -யாசித்தவர்களுக்கு, 
        ஈந்து - கொடுத்து, எய்தும் - அதனாலடையப்பட்ட, தலையினின்பமும் 
        -  மேன்மையின்    சுகத்தையும்,   அவன்    -   
        அக்குமாரனாகிய 
        பத்திரமித்திரன், எய்தினான் - அடைந்தான், எ-று.  
           தான் - அசை.                                      (11) 
        |