112மேருமந்தர புராணம்  


 

     மன்ற மாதவர் கையிட்ட வல்சியால்
     நின்ற போக நிலம்பெற்ற தொக்குமே.

     (இ-ள்.)  சாத்தொடு   -   ஸார்த்தத்தோடு,   சென்று - போகி,
அத்தீவினை  -  அந்த  இரத்தின  தீபத்தை,  சேர்ந்தவன் - சேர்ந்த
பத்திரமித்திரன்,    ஒன்றும்    -    பொருந்திய,   வாணிபத்தால் -
வியாபாரத்தால்,   பெற்ற   -   அடைந்த,  ஊதியம் - இலாபமானது,
மன்ற  -  நிச்சயமாக, மாதவர் - மஹா தபஸையுடைய முனிவர்களின்,
கை   -   கையிலே,  இட்ட   -   இடப்பட்ட, வல்சியால் - ஆகார
தானத்தினாலே,  நின்ற  -  இவ்வுலகத்தில் நிலைபெற்ற, போகநிலம் -
உத்தம   போக  பூமியை,   பெற்றதொக்கும்   -    அடைந்ததற்குச்
சமானமாகும், எ-று.

     எனவே      மிகுதியான      இலாபம்      பெற்றானென்பது
பெறப்பட்டது.                                           (14)

 238. புண்ணி யம்முத யஞ்செய்த போழ்தினில்
     எண்ணி லாத பொருட்குவை யாவையும்
     நண்ணு மென்றருள் நாத னுரையினுக்
     கண்ண லேயெடுத் தீடது வாயினான்.

     (இ-ள்.)  புண்ணியம் - முன்செய்த புண்ணியம்,  உதயஞ்செய்த
போழ்தினில்  -  உதித்த காலத்தில், எண்ணிலாத  -  கணக்கில்லாத,
பொருள்குவை    யாவையும்    -    திரவிய    சமூகங்களெல்லாம்,
நண்ணுமென்று   -   அடையுமென்று,   அருள்  -  கூறியருளுகின்ற,
நாதனுரையினுக்கு  -  ஸர்வஜ்ஞனுரைத்த வசனத்திற்கு, அண்ணலே -
ஸ்ரீஷ்டனாகிய  பத்திரமித்திரனே,  எடுத்தீடது - எடுத்துக் காட்டாக
(அதாவது : உவமையாக), ஆயினான் - ஆனான், எ-று.         (15)

 239. மணியும் முத்தும் வயிரமுஞ் சந்தனத்
     துணியு நல்லகி லுந்துகி ரும்பிற
     மணியுந் தூரியுங் கொண்டு வருமவன்
     இணையில் சீய புரமதை யெய்தினான்.

     (இ-ள்.) (இவ்வாறு இலாபத்தை அடையவே திரும்பி) மணியும் -
இரத்தினங்களும்,     முத்தும்    -    முத்துக்களும்,   வயிரமும் -
வச்சிரக்கற்களும்,  சந்தனத்துணியும்  - சந்தனக்கட்டைகளும்,  நல் -
நன்மையாகிய,    அகிலும்    -    அகிற்கட்டைகளும்,   துகிரும் -
பவளங்களும், பிறமணியும் - இவையல்லாமல் இன்னும் அநேகமாகிய
பிற இரத்தினங்களும்,   தூரியும்    -    பலகறையும்,   கொண்டு -
வியாபாரத்தால்  சம்பாதித்துக்  கொண்டு,  வருமவன்   -  வருகின்ற
அப்பத்திரமித்தின்,  இணையில்  -  உவமையில்லாத,   சீயபுரமதை -
ஸிம்ம மஹாபுரத்தை, எய்தினான் - அடைந்தான், எ-று.